MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நாளை மறுநாள் எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை! கொண்டாட்டத்தில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்!

நாளை மறுநாள் எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை! கொண்டாட்டத்தில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்!

Holiday: பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

2 Min read
Author : vinoth kumar
Published : Mar 02 2026, 10:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அய்யா வைகுண்டசாமி அவதார நாள்
Image Credit : Asianet News

அய்யா வைகுண்டசாமி அவதார நாள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அய்யா வழி பக்தர்களின் ஆன்மீகத் தலமாக விளங்கும் பிரசித்தி பெற்ற சுவாமி தோப்பு அய்யா வைகுண்டசாமி அவதார நாள் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் கலந்து கொள்வதற்காக தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் அங்கு செல்வது வழக்கம். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள வைகுண்ட சாமியின் திருத்தாங்கல் மற்றும் பகுதிகளில் சிறப்பு வழிபாடு, வாகன பவனி நடைபெறும்.

25
தென் மாவட்டங்களுக்கு விடுமுறை
Image Credit : Asianet News

தென் மாவட்டங்களுக்கு விடுமுறை

இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் அய்யா வைகுண்டசாமி அவதார நாளை முன்னிட்டு கன்னியாகுமரியை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது வழக்கம். அந்த வகையில் அய்யா வைகுண்டசாமியின் 194வது அவதார திருவிழா மார்ச் 4ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாளை மறுநாள் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
தமிழகத்தில் இனி மின்தடை இருக்காது.! பொதுமக்களுக்கு வெளியான குட்நியூஸ்.. இதுதான் காரணமா?
Related image2
பெட்டி பெட்டியாக தக்காளி.! மூட்டை மூட்டையாக வெங்காயம்.! ஒரு கிலோ இவ்வளவு தானா.? காய்கறிகளின் நிலவரம்!
35
உள்ளூர் விடுமுறை
Image Credit : Google

உள்ளூர் விடுமுறை

அதாவது பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

45
இவர்களுக்கு விடுமுறை பொருந்தாது
Image Credit : Asianet News

இவர்களுக்கு விடுமுறை பொருந்தாது

மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது. மேற்படி மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும்.

55
மார்ச் 14ம் தேதி வேலை நாளாக அறிவிப்பு
Image Credit : Google

மார்ச் 14ம் தேதி வேலை நாளாக அறிவிப்பு

மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு இயங்கும். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மார்ச் 14ம் தேதி சனிக்கிழமை அன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் அரசு அலுவலகம் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 31 நாட்கள் கொண்ட மார்ச் மாதத்தில் மட்டும் பள்ளி மாணவர்களுக்கு 12 நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி மாணவர்
விடுமுறை
பள்ளிகள் விடுமுறை
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழகத்தில் இனி மின்தடை இருக்காது.! பொதுமக்களுக்கு வெளியான குட்நியூஸ்.. இதுதான் காரணமா?
Recommended image2
ஆத்தாடி.. வெயில் இப்படி பொளக்குதே.. மழைக்கும் வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
Recommended image3
தமிழகத்தில் NDA ஆட்சி உறுதி.. திமுக கொள்ளை கும்பல் தூக்கியெறியப்படும்.. மதுரையில் கர்ஜித்த பிரதமர் மோடி!
Related Stories
Recommended image1
தமிழகத்தில் இனி மின்தடை இருக்காது.! பொதுமக்களுக்கு வெளியான குட்நியூஸ்.. இதுதான் காரணமா?
Recommended image2
பெட்டி பெட்டியாக தக்காளி.! மூட்டை மூட்டையாக வெங்காயம்.! ஒரு கிலோ இவ்வளவு தானா.? காய்கறிகளின் நிலவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved