- Home
- Tamil Nadu News
- பெட்டி பெட்டியாக தக்காளி.! மூட்டை மூட்டையாக வெங்காயம்.! ஒரு கிலோ இவ்வளவு தானா.? காய்கறிகளின் நிலவரம்!
பெட்டி பெட்டியாக தக்காளி.! மூட்டை மூட்டையாக வெங்காயம்.! ஒரு கிலோ இவ்வளவு தானா.? காய்கறிகளின் நிலவரம்!
பருவமழை காலத்தில் மட்டும் தக்காளி, வெங்காயம் விலை உச்சம்பெறும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் வரத்து அதிகரிப்பால் தக்காளி, வெங்காயம் விலை குறைந்து வருகிறது.

சமையலுக்கு காய்கறிகள் முக்கியம்
சமையல் என்றாலே காய்கறிகள் முக்கிய பங்கு என்றாலும் தக்காளி, வெங்காயம் இல்லாமல் எந்த சமையலும் இல்லை. அந்த அளவுக்கு தக்காளி, வெங்காயத்துக்கு முக்கிய பங்கு மட்டுமல்லாமல் சுவையை அள்ளிக்கொடுக்கிறது. பை நிறைய தக்காளி, வெங்காயத்தை மட்டுமே அதிகளவில் வாங்கி செல்வார்கள். பருவமழை காலத்தில் மட்டும் தக்காளி, வெங்காயம் விலை உச்சப்பெறும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் வரத்து அதிகரிப்பால் தக்காளி மற்றும் வெங்காயம் விலை போட்டி போட்டு குறைந்து வருகிறது.
தக்காளி, வெங்காயம் விலை
அதாவது சிறிய அளவிலான தக்காளி 6 முதல் 8 கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த ரக தக்காளி ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், தரமான தக்காளி ஒரு கிலோ 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் ஒரு கிலோ வெங்காயம் 20 முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோயம்பேடு காய்கறி சந்தை விலை
இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பச்சை காய்கறிகளின் இன்றைய விலை என்ன என்பதை பார்ப்போம். பீட்ரூட் 1 கிலோ 35 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 முதல் 45 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 20 முதல் 22 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 24 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 63 முதல் 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பச்சை காய்கறிகளின் விலை
வெண்டைக்காய் ஒரு கிலோ 46 முதல் 51 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ ரூ.13 முதல் 15 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 10 முதல் 15 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், நூக்கல் ஒரு கிலோ 30 முதல் 40 ரூபாய்க்கும், கோவக்காய் ஒரு கிலோ 25 முதல் 50 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 40 முதல் 45 ரூபாய்க்கும், பூண்டு ஒரு கிலோ 80 முதல் 100 ரூபாய்க்கும், பெரிய பூண்டு ரூ.350 முதல் 520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முருங்கைக்காய் விலை என்ன?
கத்திரிக்காய் ஒரு கிலோ 40 முதல் 46 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 120 முதல் 140 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 முதல் 30 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 முதல் 130 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
குறைந்த காய்கறிகள் விலை
பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 68 முதல் 90 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 முதல் 35 ரூபாய்க்கும், குடை மிளகாய் ஒரு கிலோ 62 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 முதல் 66 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சேனைக்கிழங்கு 30 ரூபாய்க்கும், மாங்காய் 55 முதல் 60 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் 50 முதல் 66 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

