MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • வீடு தேடி வரும் ரேஷன் பொருள்! வெளியான முக்கிய அறிவிப்பு! தேதி குறித்த தமிழக அரசு!

வீடு தேடி வரும் ரேஷன் பொருள்! வெளியான முக்கிய அறிவிப்பு! தேதி குறித்த தமிழக அரசு!

Thayumanavar Thittam: 65 வயதிற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு வீட்டுக்கே வந்து ரேஷன் பொருட்களை டெலிவரி செய்யும் தாயுமானவர் திட்டம் தொடங்கப்பட்டது.

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 28 2026, 07:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தாயுமானவர் திட்டம்
Image Credit : x/ ai image

தாயுமானவர் திட்டம்

தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மக்கள் நேரடியாக ரேஷன் கடைகளுக்கு சென்று நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பொருட்களை வாங்கி வருகின்றனர். ஆனால் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளால் ரேஷன் பொருட்களை வரிசையிலும், நேரில் சென்று வாங்க முடியாத சூழல் ஏற்படுகிறது. இதுதொடர்பாக முதல்வருக்கு பல்வேறு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு 65 வயதிற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு வீட்டுக்கே வந்து ரேஷன் பொருட்களை டெலிவரி செய்யும் தாயுமானவர் திட்டம் தொடங்கப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
வீடு தேடி சென்று வழங்கப்படும் ரேஷன் பொருட்கள்
Image Credit : our own

வீடு தேடி சென்று வழங்கப்படும் ரேஷன் பொருட்கள்

இதனையடுத்து ஒவ்வொரு மாதமும் மூத்த குடிமக்களுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மார்ச் மாதத்துக்கான ரேஷன் பொருட்கள் விநியோகம் குறித்து ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் அந்தந்த மாவட்டங்களுக்கான தேதியை அறிவித்து வருகின்றனர். அதன்படி சென்னை மண்டலத்துக்கு ரேஷன் பொருட்கள் வீடு தேடிச் சென்று வழங்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
சங்கீதா முடிவின் பின்னணியில் அரசியல் சதி?.. விஜய்யை முடக்கும் 'மெகா' கட்சி?.. தவெகவினர் புலம்பல்!
Related image2
கரும்பு விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்! வங்கி கணக்கில் கொட்டப்போகும் பணம்! வெளியான சூப்பர் அறிவிப்பு!
34
மூத்த முடிமக்கள், மாற்றுத்திறனாளிகள்
Image Credit : tndipr

மூத்த முடிமக்கள், மாற்றுத்திறனாளிகள்

இதுதொடர்பாக கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் சென்னை மண்டலம் சா.பாபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மார்ச் 2026 திங்களுக்கு 02.03.2026 மற்றும் 03.03.2026 ஆகிய 2 தினங்களில் சென்னையிலுள்ள அண்ணாநகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, அடையார், திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் ஆகிய 15 மண்டலங்களில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் 990 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள், அத்தியாவசியப் பொருட்களை வீடு தேடி விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

44
தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும்
Image Credit : Asianet News

தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும்

இந்த தகவலை அனைத்து நியாய விலைக்கடைகளிலும் பொது மக்கள் அறியும் வகையில் தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குடும்ப அட்டை
ரேஷன் கடை
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
TN Crop Loan Waiver : விவசாயிகளுக்கு ஜாக்பாட்! பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி! தமிழக அரசு அறிவிப்பு! முழு விவரம்!
Recommended image2
Chennai Powercut Update : சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை (மே 26) 5 மணி நேரம் மின்தடை
Recommended image3
Tamil Nadu Rain Alert : தமிழகத்தில் நாளை முதல் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
Related Stories
Recommended image1
சங்கீதா முடிவின் பின்னணியில் அரசியல் சதி?.. விஜய்யை முடக்கும் 'மெகா' கட்சி?.. தவெகவினர் புலம்பல்!
Recommended image2
கரும்பு விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்! வங்கி கணக்கில் கொட்டப்போகும் பணம்! வெளியான சூப்பர் அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved