- Home
- Tamil Nadu News
- எவ்வளவு சொல்லியும் கேட்காத அக்கா! ஆத்திரத்தில் தம்பி! அலறிய சுமித்ரா! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்.!
எவ்வளவு சொல்லியும் கேட்காத அக்கா! ஆத்திரத்தில் தம்பி! அலறிய சுமித்ரா! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்.!
சுமித்ராவுக்கு அப்பகுதியில் உள்ள பல ஆண்களுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்த விவகாரம் அவரது தம்பிக்கு தெரிய வந்ததை அடுத்து அக்காவை கண்டித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்துள்ள கருங்குளம் அருகிலுள்ள புளியங்குளத்தைச் சேர்ந்தவர் சுமித்ரா(35). இவருக்கும் ஓட்டப்பிடாரம் அருகிலுள்ள பசுவந்தனையைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டூகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து சுமித்ரா தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் சுமித்ராவுக்கு அப்பகுதியில் உள்ள பல ஆண்களுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்த விவகாரம் அவரது தம்பி முத்துராஜாவுக்கு தெரிய வந்ததை அடுத்து அக்காவை கண்டித்துள்ளார். ஆனால் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுமித்ரா, புளியங்குளத்திலுள்ள வீட்டைக் காலி செய்துவிட்டு செய்துங்கநல்லூர் ரயில் நிலையம் அருகில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு சுமித்ராவின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது சுமித்ரா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுமித்ரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். சந்தேகத்தின் பேரில் சுமித்ராவின் தம்பியான முத்து ராஜாவிடம் விசாரணை மேற்கொண்ட போது கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர், முத்துராஜாவை கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள வசந்தை போலீசார் தேடி வருகின்றனர்.
அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் எனது அக்கா அவரது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். பலருடன் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டு வந்ததாக சிலர் என்னிடம் கூறினார்கள். இதனால் அவரை கண்டித்தேன். பலமுறை கூறியும் கள்ளத்தொடர்பை அவர் கைவிடவில்லை. இதனால் நண்பரின் உதவியுடன் அக்காவை கொலை செய்ததாக தெரிவித்தார்.

