- Home
- Sports
- Sports Cricket
- IND vs SA 1st T20: கம்பேக் மேட்ச்சில் காட்டடி அடித்த ஹர்திக் பாண்ட்யா.. SA-க்கு சவாலான இலக்கு!
IND vs SA 1st T20: கம்பேக் மேட்ச்சில் காட்டடி அடித்த ஹர்திக் பாண்ட்யா.. SA-க்கு சவாலான இலக்கு!
ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் நீண்ட இடைவெளிக்கு பிறகு கம்பேக் கொடுத்த ஹர்திக் பாண்ட்யா அதிரடியில் வெளுத்துக் கட்டினார். கேசவ் மகாராஜ் பந்தில் தொடர்ந்து 2 சிக்சர்கள் விளாசிய அவர் நோர்க்யா ஓவரிலும் பவுண்டரிகளாக விரட்டினார்.

இந்திய அணி முதலில் பேட்டிங்
கட்டாக்கில் நடந்து வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்துள்ளது. பிட்ச் தொடக்கம் முதலே பவுலிங்குக்கு நன்றாக கைகொடுத்த நிலையில், தென்னாப்பிரிக்கா பவுலர்கள் அதை பயன்படுத்தி சூப்பராக பவுலிங் போட்டனர். காயத்தில் இருந்து மீண்ட துணை கேப்டன் சுப்மன் கில் வெறும் 4 ரன்னில் லுங்கி இங்கிடி பந்தில் மார்கோ யான்சனிடம் கேட்ச் ஆனார்.
பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம்
அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் (12 ரன்) 1 சிக்சர் அடித்த திருப்தியுடன் லுங்கி இங்கிடி பந்தில் வெளியேறினார். பின்பு அதிரடி இளம் வீரர் அபிஷேக் சர்மாவும் (17 ரன்) விரைவில் நடையை கட்டினார். இந்திய அணி 48/3 என பரிதவித்தது. பின்னர் ஓரளவு சிறப்பாக விளையாடிய திலக் வர்மா (26) இங்கிடி பந்தில் கேட்ச் ஆனார். பின்பு அக்சர் படேலும் (23 ரன்) விரைவில் வெளியேறினார்.
ஹர்திக் பாண்ட்யா அதிரடி
ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் நீண்ட இடைவெளிக்கு பிறகு கம்பேக் கொடுத்த ஹர்திக் பாண்ட்யா அதிரடியில் வெளுத்துக் கட்டினார். கேசவ் மகாராஜ் பந்தில் தொடர்ந்து 2 சிக்சர்கள் விளாசிய அவர் நோர்க்யா ஓவரிலும் பவுண்டரிகளாக விளாசினார். இதற்கிடையே ஷிவம் துபேவும் (11) கிளீன் போல்டானார். மறுபக்கம் கொஞ்சம் கூட பயமின்றி காட்டடி அடித்த ஹர்திக் பாண்ட்யா 25 பந்தில் சூப்பர் அரை சதம் விளாசினார்.
தென்னாப்பிரிக்காவுக்கு சவாலான இலக்கு
இந்திய அணி 20 ஓவரில் 175 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்ட்யா வெறும் 28 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 59 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தென்னாப்பிரிக்கா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய லுங்கி இங்கிடி 4 ஓவரில் 31 ரன் கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். லுதோ சிபாம்லா 2 விக்கெட் வீழ்த்தினார். சவாலான இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்கிறது.

