MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!

IND vs SA T20: இந்தியா, தென்னாப்பிரிக்கா டி20 தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இந்த தொடரில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இரண்டு மெகா சாதனை படைக்க தயாராக உள்ளார்.

2 Min read
Author : Rayar A
Published : Dec 08 2025, 07:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
இந்தியா, தென்னாப்பிரிக்கா டி20 தொடர்
Image Credit : Insta/hardikpandya93

இந்தியா, தென்னாப்பிரிக்கா டி20 தொடர்

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான டி20 தொடர் நாளை (டிசம்பர் 9) தொடங்குகிறது. முதல் டி20 போட்டி கட்டாக்கில் நாளை நடைபெற உள்ளது. இரண்டாவது T20I போட்டி டிசம்பர் 11 அன்று முல்லன்பூரில் நடைபெறும். மூன்றாவது T20I போட்டி டிசம்பர் 14 அன்று தர்மசாலாவிலும், நான்காவது போட்டி டிசம்பர் 17 அன்று லக்னோவிலும் நடைபெறும். இந்த தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப் போட்டி டிசம்பர் 19 அன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
ஹர்திக் பாண்ட்யாவின் மெகா சாதனை
Image Credit : X/@ImTanujSingh

ஹர்திக் பாண்ட்யாவின் மெகா சாதனை

டெஸ்ட் தொடரில் தோல்வி கண்ட இந்திய அணி ஒருநாள் தொடரை வென்று அசத்தியது. இதேபோல் டி20 தொடரையும் கைப்பற்ற ஆயத்தமாகி உள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் ஸ்டார் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தென்னாப்பிரிக்கா T20I தொடரில், 2,000 T20I ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் என்ற இரட்டை மைல்கல்லை எட்ட உள்ளார். அதாவது பாண்ட்யா இந்த தொடரில் 2000 T20 ரன்களை நிறைவு செய்ய 140 ரன்கள் தொலைவிலும், 100 விக்கெட்டுகளை வீழ்த்த இரண்டு விக்கெட்டுகள் தொலைவிலும் உள்ளார்.

அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர்

T20I போட்டிகளில் பாண்ட்யா 100 விக்கெட்டுகளை நிறைவு செய்தால், இந்த சாதனையை எட்டும் இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெறுவார். தற்போது, அவர் 26.58 சராசரியில் 98 விக்கெட்டுகளுடன், குறுகிய வடிவ போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரராக உள்ளார். மறுபுறம், 120 போட்டிகளில், பாண்டியா 27.35 சராசரியுடன் 1860 ரன்களையும், 141.01 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஐந்து அரை சதங்களையும் அடித்துள்ளார்.

33
காயத்தில் இருந்து மீண்ட பாண்ட்யா
Image Credit : Instagram@hardikpandya93

காயத்தில் இருந்து மீண்ட பாண்ட்யா

செப்டம்பரில் நடந்த ஆசிய கோப்பை 2025 போட்டியின் போது ஏற்பட்ட தொடை தசைப்பிடிப்பு காயத்திற்குப் பிறகு பாண்டியா போட்டிகளில் பங்கேற்கவில்லை. காயம் காரணமாக, பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை 2025 இறுதிப் போட்டியையும் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெள்ளைப்பந்து தொடரையும் அவர் தவறவிட்டார். சையத் முஷ்டாக் அலி டிராபியில் (SMAT) பரோடா அணிக்காக விளையாடி தனது உடற்தகுதியை பாண்ட்யா நிரூபித்தார்.

பஞ்சாப்பிற்கு எதிராக 42 பந்துகளில் 77 ரன்கள் அடித்து, பரோடா அணிக்கு ஏழு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைத் தேடித் தந்தார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தக்கூடிய ஒரு முக்கிய வீரர் என்பதால் பாண்ட்யா வருகை இந்திய அணிக்கு பெரும் பலன் என்பதில் சந்தேகமில்லை.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஹர்திக் பாண்டியா
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs NZ T20: புயல் வேகத்தில் அர்ஷ்தீப் சிங்.. புவனேஷ்வர் குமாரின் சாதனையை தகர்த்து வரலாற்று சாதனை!
Recommended image2
Kieron Pollard: MI அணியின் புதிய ‘கிங்’ பொல்லார்ட்..! தலைமைப் பயிற்சியாளராக அதிரடி புரமோஷன்..
Recommended image3
IND vs NZ 2nd T20: இளம் தோனி வந்தாச்சு.. ருத்ரதாண்டவமாடிய திலக் வர்மா.. இந்திய அணி த்ரில் வெற்றி!
Related Stories
Recommended image1
IND vs SA 1st T20: ஹர்சித் ராணா நீக்கம்.. தமிழக வீரருக்கும் இடமில்லை.. இந்திய அணி பிளேயிங் லெவன்!
Recommended image2
IND vs SA T20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஹர்திக் பாண்ட்யா கம்பேக்! 2 அதிரடி வீரர்கள் நீக்கம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved