- Home
- Cinema
- தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் கள்ளாகட்டிய டாப் 3 படங்கள் பட்டியல்: லேட்டஸ்ட் கோலிவுட் அப்டேட்!
தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் கள்ளாகட்டிய டாப் 3 படங்கள் பட்டியல்: லேட்டஸ்ட் கோலிவுட் அப்டேட்!
Latest Kollywood Box Office Updates : 2025ஆம் ஆண்டு திரைக்கு வந்த படங்களில் தமிழ் சினிமாவில் கள்ளாகட்டிய டாப் 3 படங்களின் லேட்டஸ்ட் பாக்ஸ் ஆபிஸ் அப்டேட் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பாக்ஸ் ஆபிஸில் கள்ளாகட்டிய டாப் 3 படங்கள்
தமிழ் சினிமாவைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 500க்கும் அதிகமாக படங்கள் வெளியாகி வருகின்றன. இதில் டாப் ஹீரோ படங்கள் முதல் சிறிய பட்ஜெட் படங்கள் வரை ஹிட் கொடுப்பதும், தோல்வி கொடுப்பதும் நடந்து வருகிறது. அந்த வகையில் 2025ஆம் ஆண்டு திரைக்கு வந்த படங்களில் எல்லோரது கவனத்தையும் ஈர்த்து பாக்ஸ் ஆபிஸில் கள்ளாகட்டிய டாப் 3 படங்கள் என்னென்ன பார்க்கலாம்.
2025ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியான அனைத்து படங்களிலும் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படமாகவும் பாக்ஸ் ஆபிஸ் அதிக வசூல் குவித்த படமாகவும் முதலிடத்தில் இருப்பது ரஜினிகாந்தின் கூலி படம் தான். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகர்ஜூனா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், ரச்சிதா ராம், ரெபே மோனிகா ஜான் என்று ஏராளமான பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.
Coolie
கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான இந்த படம் உலகம் முழுவதும் இந்தப் படம் ரூ.518 கோடி வரையில் வசூல் குவித்து இந்த ஆண்டில் அதிக வசூல் குவித்த முதல் தமிழ் படம் என்ற சாதனையை கூலி படம் படைத்தது. தமிழ்நாட்டில் மட்டும் கூலி ரூ.183.18 கோடி வசூல் குவித்தது. முதல் நாளில் ரூ.44.5 கோடி வசூல் குவித்தது.
கதைக்களம்:
ஊழல் கும்பலை எதிர்த்துப் போராடும் முன்னாள் தொழிற்சங்கத் தலைவரைப் பற்றிய அதிரடி நாடகமான இந்தத் திரைப்படம். ஆக்சன் திரைப்படம் ஆகவும், இப்போது சென்டி மட்டையும் தலைவியும் இந்த படம் சூப்பர் ஹிட் ஆகவும் இருந்தது. ரஜினிக்கு ரொம்ப நாள் கழித்து இந்த படம் மிகவும் வெற்றியை கொடுத்தது. தற்போது வெளியாகி உள்ள அஜித்தின் திரைப்படம் குட்பேக்அளியை விட கூலி அதிக வசூலையும், ரசிகர்களுக்கிடையே மிகுந்த வரவேற்பையும் ஆர்வத்தையும் இந்த படம் முழுக்க இருக்கும்.
ரஜினி:
ரஜினிக்கு இந்த படம் 171 வது படம் என கூறப்படுகிறது தமிழ் சினிமாவில் ரஜினி தனக்கென ஒரு தனி இடத்தில் பிடித்துள்ளார் அவர் செய்யும் ஒவ்வொரு செய்கையும் ஒவ்வொரு ஸ்டைலையும் ரசிகர்கள் அனைவரும் மிகவும் ரசித்து வருகின்றனர் அடுத்தடுத்து படங்களிலும் அவர் தனக்கென ஒரு ஸ்டைலி அப்பாடத்தில் வைத்திருப்பார். பல நடுவில் அவருக்கு பல படங்கள் தோல்வியுற்று இந்த நிலையிலும் இப்போது தற்போது நடந்து வரும் அனைத்து படங்களும் அவருக்கு வெற்றி படமாகவே அமைகிறது இதில் முக்கிய காரணம் கூலி படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் .
நாகர்ஜூனா:
இப்படத்தில் நாகர்ஜுனா வில்லன் கேரக்டரில் நடித்திருப்பார் இந்த கேரட்டிற்கு இவரை தவிர வேறு யாரும் பொருத்தமில்லாத இருப்பார் என்பதே ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தது இந்த படத்தில் இவர் தனி தனக்கென தனி இடத்தையும் ஒரு கெத்தையும் பார் மிகவும் அருமையாக நடித்து இருப்பார். தமிழ் சினிமாவுக்கு நீண்ட காலத்திற்குப் பிறகு கூலி படத்தின் மூலம் கம் பேக் கொடுத்தார் நாகர்ஜுனா. இவரதும் பாட்டு பாடத்தில் இடம் பெற்றிருக்கும் இந்த பாட்டின் மூலம் இவர் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்தப் பாட்டை அனைவரும் வைப் செய்து வந்தனர்.
லோகேஷ் கனகராஜ்:
லோகேஷ் கனகராஜ் கூலி படத்தின் இயக்குனர் இப்படத்தினை மிகத் தெளிவாகவும் அற்புதமாகவும் ஆர்வம் கலந்த கதைக்களமாகவே இந்த படம் தமிழ் சினிமாவுக்கு வெளியிடப்பட்டது. 2025 இல் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றது இவருக்கு பெரும் சாதனையை படத்துள்ளார் லோகேஷ் நாகராஜ் வசூலில் மன்னராக உள்ளார் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கும் பல படங்கள் இவருக்கு வெற்றிப்படமாகவே அமைந்தது விஜயுடனும் இவர் எடுத்த இரண்டு படங்களும் இவருக்கு வெற்றியைத் தந்தன.
பிளடி ஸ்வீட்
புதிது புதிதான இவரது யோசனையும் ஒவ்வொரு படத்திலும் இவருக்கென வைக்கும் டைட்டிலும் டயலாக்கும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பிளடி ஸ்வீட் என்னும் டயலாக் தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு இடையே பெரிய வரவேற்பை பெற்று வந்தது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் மிகுந்த சென்டிமென்ட் படமாக அவரது அப்பாவின் கூலி நம்பர் 1421 எனும் நம்பரை ரஜினி அவர்களுக்கும் அதே நம்பரை கொடுத்து செண்டிமிட்டாக அப்பா நினைவாக இப்படத்தை இயக்கியிருப்பார்.
இசையமைப்பாளர்:
கூலி திரைப்படத்தின் இசை அமைப்பாளர் அனிருத். அவரின் திறமை இன்னும் வெளிக்கொண்டே தான் இருக்கிறது என்று கூறலாம் இப்படத்தின் மூலம் ஒவ்வொரு பாடும் சூப்பர் ஹிட் அடித்ததே என்று கூறலாம் இன்னுமே இப்ப டாப் ஃபர்ஸ்டில் மோனிகா இன்னும் பாடலே முதலிடத்தில் இருப்பதாக சினிமா வட்டாரத்தின் மூலம் தெரிவிக்கப்படுகிறது. பின்னணி இசைக்களையும் அனிருத் பட்டையை கிளப்பி இருப்பார் என்பதை குறிப்பிடத்தக்கது. ரஜினிக்கும் எப்படி பின்னணி பட்டு அமைக்க வேண்டும் என்பதிலும் வில்லனுக்கு பின்னணி பாட்டி எப்படி அமைக்க வேண்டும் என்பதையும் தனித்தனியாக அமைத்து அசத்தியிருப்பார் அனிருத்.
குட் பேட் அக்லீ:
அஜித் குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வந்த இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.248.25 கோடி வரையில் வசூல் குவித்தது. இதே போன்று இந்திய சினிமாவில் ரூ.147.75 கோடி வரையில் வசூல் குவித்தது. தமிழகத்தில் முதல் வாரத்தில் மட்டும் ரூ.83.66 கோடி வரையில் வசூல் குவித்து இந்த ஆண்டில் அதிக வசூல் குவித்த 2ஆவது படம் என்ற சாதனையை படைத்தது.
விடாமுயற்சி:
இந்தப் பட்டியலில் அடுத்த இடத்தில் இருப்பது விடாமுயற்சி. அஜித் நடிப்பில் வெளியான இந்தப் படம் உலகளவில் ரூ.135.89 கோடி வரையில் வசூல் குவித்தது. இந்தியளவில் ரூ.78.58 கோடி வரையில் வசூல் குவித்தது. முதல் வாரத்தில் மட்டும் ரூ.60.28 கோடி வசூல் குவித்தது. அஜித் நடிப்பில் வெளியான இந்தப் படம் தோல்வி படமாக அமைந்தது.
டிராகன்:
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் இந்த ஆண்டின் சிறந்த படமாக அமைந்தது. அதோடு இந்தியளவில் ரூ.118.83 கோடி வரையில் வசூல் குவித்தது. குடும்பஸ்தன் படம் ரூ.27.5 கோடி வசூல் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.