- Home
- Sports
- Sports Cricket
- IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!
India Thrash SA by 101 Runs in 1st T20I: பேட்டிங்கில் 59 ரன்களும், பவுலிங்கில் 1 விக்கெட்டும் வீழ்த்தி ஆல்ரவுண்டராக ஜொலித்த ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியா, தென்னாப்பிரிக்கா முதல் டி20
கட்டாக்கிஇந்தியா, தென்னாப்பிரிக்கா முதல் டி20ல் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது.
சூப்பர் அரை சதம் விளாசிய ஹர்திக் பாண்ட்யா வெறும் 28 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 59 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தென்னாப்பிரிக்கா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய லுங்கி இங்கிடி 4 ஓவரில் 31 ரன் கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். லுதோ சிபாம்லா 2 விக்கெட் வீழ்த்தினார்.
இந்தியா பவுலிங் அசத்தல்
பின்பு சவாலான இலக்கை நோக்கி பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி தொடக்கம் முதலே தடுமாறியது. குயின்டன் டி காக் ரன் ஏதும் எடுக்காமல் அர்ஷ்தீப் சிங் பந்தில் டக் அவுட்டானார். அர்ஷ்தீப் ஸ்டப்ஸையும் (14) அவுட்டாக்கினார். பின்பு டெவால்ட் பிரெவிஸ் மற்றும் மார்க்ராம் இணைந்து 40 ரன்கள் வரை கொண்டு சென்ற நிலையில், அக்சர் படேல் மார்க்ரமை (14) அவுட்டாக்கி பார்ட்னர்ஷிப்பை முறியடித்தார்.
தென்னப்பிரிக்கா படுதோல்வி
தொடர்ந்து 4 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த டெவால்ட் பிரெவிஸை பும்ராவும் டேவிட் மில்லரை (1) ஹர்திக் பாண்ட்யாவும் வெளியேற்றினார்கள். இதன்பிறகு டோனோவன் ஃபெரீரா (5) மற்றும் மார்கோ ஜான்சன் (12) ஆகியோர் சக்ரவர்த்தியின் சுழலில் வீழ்ந்தனர்.
மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் இரட்டை இலக்கத்தை தாண்டவில்லை. தென்னாப்பிரிக்கா அணி கடைசி 44 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. வெறும் 12.3 ஓவர் மட்டுமே தாக்குப்பிடித்த அந்த அணி 74 ரன்னில் சுருண்டு 101 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகன்ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகன்
இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த இமலாய வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் முன்னிலை 1 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. பேட்டிங்கில் 59 ரன்களும், பவுலிங்கில் 1 விக்கெட்டும் வீழ்த்தி ஆல்ரவுண்டராக ஜொலித்த ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

