Asianet News TamilAsianet News Tamil

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள்.. 18,000 கோடி ஒதுக்கிய திராவிட மாடல் அரசு - ஆ.ராசா பெருமிதம்

அடித்தட்டு மக்களின் கல்வியை மேம்படுத்த அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இனையாக மாற்ற 18,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கல்வியை மேம்படுத்தி வருகிறார் முதல்வர் மு.க ஸ்டாலின் என்று நீலகிரி எம்.பியும், திமுக துனை பொதுச்செயலாளருமான ஆ.ராசா கூறியுள்ளார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை நகராட்சி பகுதியில் உள்ள பல்வேறு வார்டுகளில் சாலை  மேம்பாடு, விளையாட்டு பூங்கா உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை துவங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது இதில் திமுக துறை பொதுச்செயலாளரும், நீலகிரி எம்.பியுமான ஆ.ராசா பங்கேற்று வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்தார். நீண்ட காலமாக பட்டா இன்றி வசித்து வந்த 46 பயனாளிகளுக்கு 28 லட்சம் மதிப்பிலான இலவச  பட்டாக்களையும் ஆ.ராசா வழங்கினார்.

இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா, “தமிழகத்தில் நடைப்பெற்று வரும் திராவிட மாடல் திமுக ஆட்சி மக்களின் தேவைகளை அறிந்து செயல்படுவதாகவும் தேர்தலின் போது மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் படிப்படியாக நிறைவேற்றபட்டுள்ளது. பெண்களுக்கு அறிவித்த பெண்கள் உரிமைத் தொகை ஒன்று மட்டும் விடுபட்டிருந்ததை கையில் எடுத்து கொண்டு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நாங்கள் மக்களை ஏமாற்றி விட்டதாக பேசி வந்தார்.

இன்று அந்த திட்டமும் நிறைவேற்றபட்டுள்ளது. சொல்லாத ஏராளமான திட்டங்களையும் இந்த அரசு செய்து வருகிறது. கொரானோ காலத்தில் பெற்றோர்களை இழந்து தவித்த குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வு மேம்பட மூன்று லட்சம், ஐந்து லட்சம் என அறிவிக்காத பல நலத்திட்டங்களை மக்களுக்காக அளித்தவர் தான் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்று கூறினார்.

தாழ்த்தப்பட்ட அடித்தட்டு மக்களின் கல்வி அறிவை  மேம்படுத்த அரசுப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களும் அனைத்து அரசு பதவிகளுக்கும் வர வேண்டும் என்பதற்காக அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இனையாக மாற்ற 18,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது திராவிட மாடல் ஆட்சியின் திமுக தலைவர் ஸ்டாலின் தான் என்று பேசினார்.

இதையும் படிங்க..பாஜகவில் இருந்து விலகும் ஜெகதீஷ் ஷெட்டர்.. தூண்டில் போட்ட காங்கிரஸ் - கர்நாடக பாஜகவில் உச்சகட்ட குழப்பம்

இதையும் படிங்க..அவர பெரிய ஆள் ஆக்காதீங்க.. அண்ணாமலை பற்றி என்கிட்ட கேட்காதீங்க - கடுப்பான இபிஎஸ்

Video Top Stories