அவர பெரிய ஆள் ஆக்காதீங்க.. அண்ணாமலை பற்றி என்கிட்ட கேட்காதீங்க - கடுப்பான இபிஎஸ்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுகவை விமர்சித்து வருகிறாரே ? என்ற கேள்விக்கு, அவரைப் பற்றி பேச வேண்டாம் என்று பதில் அளித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
சேலம் மாவட்டம் ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புறநகர் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர செயலாளர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் புறநகர் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகளிடம் உறுப்பினர் படிவங்களை வழங்கி துவக்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி.
பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "பாஜக தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிட்டாரா? என்பது தெரியவில்லை. பத்திரிக்கைகளில் சொத்துப்பட்டியல் வெளியிட்டது குறித்து பார்த்தேன். அவர் ஊழல் வெளியிடட்டும் பார்க்கலாம் . கர்நாடக தேர்தல் குறித்து நாளை நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி போட்டியிடுவது குறித்து நாளை முடிவெடுக்கப்படும்.
இதையும் படிங்க..அண்ணாமலை சொன்னதெல்லாம் பொய்.. பதறியடித்து போய் விளக்கம் கொடுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம்
டிடிவி தினகரன் அதிமுகவின் ஊழல் பட்டியல் வெளியிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். முதலில் தினகரன் சொத்து பட்டியலை வெளியிட வேண்டும். அவருக்குன் லண்டனில் சொத்து உள்ளது. அதை கண்டுபிடித்து அரசு உடைமையாக்கிட வேண்டும். ஆட்சியில் இருந்தால் ஊழல் செய்திருக்கிறார்கள் என்று அர்த்தமில்லை. அதிமுக வளர்ச்சியைக் கண்டு பொறுக்காமல் வதந்தி பரப்புகிறார்கள்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுகவை விமர்சித்து வருகிறாரே ? என்ற கேள்விக்கு, அவரைப் பற்றி பேச வேண்டாம், அண்ணாமலை பேசிப் பேசியே பெரிய ஆளாக நினைக்கிறார். நான் 50 வருடமாக அரசியலில் இருக்கிறேன். எனவே கட்சியில் என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என்பது எனக்கு தெரியும். ஆனால் அவர் பேட்டி கொடுத்தே பெரியார் ஆக வேண்டும் என நினைக்கிறார். தயவுசெய்து அவரைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள். மீண்டும் ஒருமுறை கேட்கிறேன். அவரைப் பற்றிய கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்.
வேறு எந்த கட்சியை பற்றி வேண்டுமானாலும் கேளுங்கள் . ஏனென்றால் அவர்களுக்கு அடிப்படை தன்மை தெரிய வேண்டும் .கட்சியில் இருப்பவருக்கு அடிப்படை தன்மை தெரியவேண்டும். அப்படிப்பட்டவர்களை பற்றி கேட்டால் நான் பேசுவேன். தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக பேசுகிறார். முதிர்ந்த அரசியல்வாதி பற்றி கேளுங்கள் பதில் சொல்லுகிறேன். என்னிடம் அண்ணாமலையை பற்றி கேட்க வேண்டாம்” என்று கடுப்பில் பேசினார் எடப்பாடி பழனிசாமி.
இதையும் படிங்க..எனக்கு வேற வழி தெரியல.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட அண்ணாமலை - திமுக ஊழல் வீடியோ வெளியான பின்னணி