பாஜகவில் இருந்து விலகிய ஜெகதீஷ் ஷெட்டர்.. தூண்டில் போட்ட காங்கிரஸ் - கர்நாடக பாஜகவில் உச்சகட்ட குழப்பம்
பாஜகவின் முக்கிய புள்ளியான ஜெகதீஷ் ஷெட்டர், தனக்கு வாய்ப்பு வழங்காவிட்டாலும், தனித்து போட்டியிடுவேன் என்று கூறி பாஜக தலைமைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருந்தார்.
விரைவில் நடைபெறவிருக்கின்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் மாநிலங்களிலேயே கர்நாடகாவில் மட்டும்தான் பாஜக ஆட்சி உள்ளது.
அதனால் அங்கு ஆட்சியைத் தக்கவைப்பது பாஜகவின் தென்மாநில வியூகத்திற்கு மிகவும் முக்கியமானது ஆகும். அதேவேளையில் கருத்துக்கணிப்புகள் சில இப்போதைய சூழலில் தேர்தல் காங்கிரஸுக்கு சாதகமாக இருப்பதாகக் கூற பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பார்த்துப் பார்த்து தேர்வு செய்து வெளியிட்டுள்ளது. அதனால் பலமுறை எம்எல்ஏவாக இருந்தவர்களுக்குக் கூட இந்தமுறை சீட் வழங்கப்படவில்லை.
வெற்றி வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று பாஜக கணக்கு போட்டு செயல்படுகிறது என்று கூறப்படுகிறது. பாஜகவின் வேட்பாளர்கள் பட்டியல் பாஜகவினரிடையே பெரும் அதிருப்தியையும் வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. கர்நாடகாவின் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. பாஜகவின் முக்கிய புள்ளியான ஜெகதீஷ் ஷெட்டர், தனக்கு வாய்ப்பு வழங்காவிட்டாலும், தனித்து போட்டியிடுவேன் என்று கூறி பாஜக தலைமைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், பிரகலாத் ஜோஷி ஆகியோர் ஜெகதீஷ் ஜெட்டரின் இல்லத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெகதீஷ் ஷெட்டர், “30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி பணியாற்றிய தன்னை, பாஜக நடத்திய விதம் வேதனை அளிக்கிறது. தனித்தோ அல்லது கூட்டணி அமைத்தோ தனது ஹூப்ளி - தர்வாட் தொகுதியில் நிச்சயம் போட்டியிடுவேன்" என்றார்.
இது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று பெலகாவியில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசிய போது,பாஜக கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஈசுவரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். பாஜகவின் கொள்கைகளை தீவிரமாக கடைப்பிடித்து வந்த அவரது நிலைமை தற்போது என்ன ஆகி இருக்கிறது.
இதையும் படிங்க..அவர பெரிய ஆள் ஆக்காதீங்க.. அண்ணாமலை பற்றி என்கிட்ட கேட்காதீங்க - கடுப்பான இபிஎஸ்
ஈசுவரப்பாவின் இந்த நிலைமையை பார்த்தாலே பாஜகவில் மூத்த தலைவர்களை சரியாக நடத்துவதில்லை என்பது தெளிவாகி இருக்கிறது. பாஜகவின் முதல் மற்றும் 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியான பின்பு நிறைய தலைவர்கள் சீட் கிடைக்காமல் அதிருப்தி அடைந்துள்ளனர். சீட் கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் முதல் அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டருடன் நான் எந்த பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை.
அவர் காங்கிரசுக்கு வந்தால் வரவேற்போம். லட்சுமண் சவதி காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பதால், பெலகாவியில் எங்களுக்கு பெரிய சக்தி கிடைத்துள்ளது. பெலகாவியில் காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்” என்று கூறியுள்ளார். தற்போது கதீஷ் ஷெட்டர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதையும் படிங்க..எனக்கு வேற வழி தெரியல.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட அண்ணாமலை - திமுக ஊழல் வீடியோ வெளியான பின்னணி