MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • இந்தியாவில் காமெனி பெயர் கொண்ட சாலை எங்கே இருக்கு தெரியுமா? வரலாறு முக்கியம் அமைச்சரே

இந்தியாவில் காமெனி பெயர் கொண்ட சாலை எங்கே இருக்கு தெரியுமா? வரலாறு முக்கியம் அமைச்சரே

ஈரான்-இஸ்ரேல் பதற்றங்களுக்கு மத்தியில் இந்தியாவில் உள்ள ‘இமாம் காமெனி சாலை’ சமூக ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது. இதனைப் பற்றிய பேச்சு தற்போது ட்ரெண்டிங்காக மாறியுள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : Mar 03 2026, 02:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இந்தியாவில் உள்ள காமெனி சாலை
Image Credit : Google

இந்தியாவில் உள்ள காமெனி சாலை

ஈரான்–இஸ்ரேல் போரின் பின்னணியில் உலகம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது. இந்த சூழலில், ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி காமெனி உயிரிழந்ததாக வெளியாகிய தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதன் நடுவில் இந்தியாவிலும் ஒரு சுவாரஸ்யமான விவாதம் கிளம்பியுள்ளது. ஹைதராபாத் நகரில் ‘இமாம் காமெனி சாலை’ என்ற பெயரில் ஒரு சாலை இருப்பது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பஞ்சாரா ஹில்ஸ் ரோடு 7
Image Credit : ANI

பஞ்சாரா ஹில்ஸ் ரோடு 7

பஞ்சாரா ஹில்ஸ் ரோடு எண் 7 பகுதியில், GVK One மாலுக்கு எதிரே உள்ள இந்த சாலை அதிகாரப்பூர்வமாக ‘Imam Khamenei Road’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பெயர் சமீபத்திய சம்பவங்களால் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பலரும், “இது சமீபத்தில் பெயரிடப்பட்டதா?” என்ற கேள்வியை எழுப்பினர். ஆனால் உண்மை வேறு திசையில் செல்கிறது.

35
ஹைதராபாத் காமெனி ரோடு
Image Credit : ANI

ஹைதராபாத் காமெனி ரோடு

அந்த சாலைக்கு இந்த பெயர் வழங்கப்பட்டதற்கு வரலாற்று பின்னணி உள்ளது. அப்பகுதியில் ஈரான் தூதரகம் இயங்கிய காலத்தில், ஹைதராபாத் மற்றும் ஈரான் இடையேயான கலாச்சாரம் மற்றும் வர்த்தக உறவுகளை நினைவுகூரும் வகையில் இந்த பெயர் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. குத்ப் ஷாஹி ஆட்சிக் காலம் முதல் ஈரான் மற்றும் டக்கான் பிராந்தியத்துக்கு இடையே நெருங்கிய தொடர்பு இருந்தது என்பது வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடும் தகவல் ஆகும்.

45
உயர்மட்ட தலைவர் ருஹொல்லா காமெனி
Image Credit : X

உயர்மட்ட தலைவர் ருஹொல்லா காமெனி

மேலும், இந்த சாலை பெயர் சமீபத்தில் உயிரிழந்த அலி காமெனியை நினைவுகூர அல்ல. ஈரானின் முதல் உயர்மட்ட தலைவர் ருஹொல்லா காமெனியை நினைவுகூறும் வகையில் பெயரிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை பலர் சமீபத்தில் தான் அறிந்ததாக சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

55
வைரலாகும் ரோடு
Image Credit : ANI

வைரலாகும் ரோடு

உலக அரசியல் பரபரப்பின் நடுவில், ஹைதராபாத் நகரில் உள்ள ஒரு சாலை பெயர் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. வரலாறு, கலாச்சாரம் மற்றும் அரசியல் ஆகியவை ஒரே இடத்தில் சந்திக்கும் சின்னமாக இந்த ‘இமாம் காமெனி சாலை’ இன்று கவனம் பெறுகிறது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஈரான்
இந்தியா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: 2027-ல் புதிய சம்பளம் வந்தால் நிலுவைத்தொகை எவ்வளவு? முழு கணக்கீடு இதோ
Recommended image2
PM Ujjwala Yojana Subsidy: அல்டிமேட் சந்தோஷ செய்தி.! கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Recommended image3
Central Government Employees Bonus 2026: அக்டோபரில் போனஸ் வருமா? ரூ.7,000-ல் இருந்து ரூ.21,000 ஆகுமா?
Related Stories
Recommended image1
500 கிமீ ரேஞ்ச்.. காருக்குள் ஒரு திரையரங்கு அனுபவம்.. டிரிபிள் HD டிஸ்ப்ளே.. இந்தியாவே ஆடிப்போச்சு
Recommended image2
10 ஆண்டு நிம்மதியா இருக்கலாம்.. இந்த ஸ்கூட்டரை வாங்கினால் போதும்.. எந்த ஸ்கூட்டர் பெஸ்ட்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved