MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • வெறும் ரூ.7 லாட்டரி சீட்டு... ஓவர் நைட்டில் அடித்த ரூ.1 கோடி ஜாக்பாட்: கூலித் தொழிலாளியின் வாழ்க்கையை மாற்றிய பம்பர் பரிசு!

வெறும் ரூ.7 லாட்டரி சீட்டு... ஓவர் நைட்டில் அடித்த ரூ.1 கோடி ஜாக்பாட்: கூலித் தொழிலாளியின் வாழ்க்கையை மாற்றிய பம்பர் பரிசு!

குழந்தைகளுக்குத் துணி வாங்குவதற்காக கடைத்தெருவுக்குச் சென்ற பஞ்சாப் பெண் ஒருவர், வெறும் ரூ.7 கொடுத்து வாங்கிய லாட்டரி சீட்டின் மூலம் ஒரே இரவில் ரூ.1 கோடி பரிசை வென்று பெரும் பணக்காரராக மாறியுள்ளார்.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Oct 24 2026, 04:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
குழந்தைகளுக்குத் துணி வாங்கச் சென்ற பஞ்சாப் பெண்
Image Credit : x

குழந்தைகளுக்குத் துணி வாங்கச் சென்ற பஞ்சாப் பெண்

பஞ்சாப் மாநிலம் கோட்கபுரா (Kotkapura) பகுதியைச் சேர்ந்தவர் பிம்லா தேவி. இவரது கணவர் தினக்கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். இந்நிலையில், தனது குழந்தைகளுக்குத் துணிகள் வாங்குவதற்காக பிம்லா தேவி கடைத்தெருவுக்குச் சென்றார். அப்போது, ரயில்வே சாலையில் உள்ள ரயில் நிலையம் அருகே செயல்பட்டு வரும் 'ஸ்டார் லாட்டரி' கடைக்குச் சென்ற அவர், தற்செயலாக ஒரு ஆர்வத்தில் ₹7 மதிப்பிலான லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். இந்தச் சிறிய முயற்சி, அடுத்த நாளே தங்கள் தலையெழுத்தையே மாற்றிவிடும் என்று அவர் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ரூ.7 லாட்டரி சீட்டில் ஒரே இரவில் அடித்தது ரூ.1 கோடி
Image Credit : x

ரூ.7 லாட்டரி சீட்டில் ஒரே இரவில் அடித்தது ரூ.1 கோடி

சிக்கிம் மாநில அரசால் நடத்தப்படும் இந்த லாட்டரி குலுக்கலின் முடிவுகள் வெளியானதும், லாட்டரி கடை உரிமையாளரான நரேஷ் மோங்கா, பிம்லா தேவியின் குடும்பத்தைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது, பிம்லா தேவி வாங்கிய சீட்டுக்கு ₹1 கோடி பம்பர் பரிசு விழுந்திருப்பதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்தத் தகவலைக் கேட்டு ஆனந்தக் கண்ணீரில் திளைத்த பிம்லா தேவியின் குடும்பத்தினர் உடனடியாக அந்தக் கடைக்கு விரைந்தனர். கடை உரிமையாளர் மோங்கா அவர்களுக்கு இனிப்புகள் வழங்கித் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். தகவலறிந்து அக்கம் பக்கத்தினரும், தெரிந்தவர்களும் வாழ்த்துகளைக் குவிக்க, பிம்லா தேவியின் குடும்பத்தினர் பஞ்சாபின் பாரம்பரிய 'பங்ரா' நடனமாடி வெற்றிக் களிப்பைக் கொண்டாடினர்.

34
”எதிர்காலத்திற்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது”
Image Credit : x

”எதிர்காலத்திற்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது”

கூலித் தொழிலாளியின் சொற்ப வருமானத்தில் குடும்பச் செலவுகளைச் சமாளித்துப் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வந்த பிம்லா தேவியின் குடும்பத்திற்கு, இந்தத் திடீர் ஜாக்பாட் மிகப்பெரிய நிம்மதியைத் தந்துள்ளது. கணவரின் கூலி வருமானத்தை வைத்து வீட்டுச் செலவுகளை நடத்துவது எப்போதும் எளிதானதாக இருந்ததில்லை. ஆனால், இந்த எதிர்பாராத வெற்றி எங்க குழந்தைகளின் எதிர்காலத்திற்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது என்று பிம்லா தேவி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். பரிசுத் தொகையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும், குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து, குடும்பப் பொருளாதார நிலையை உயர்த்தவும் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்காகவும் சிறுதொழிலைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

44
ரூ.1 கோடி மதிப்புள்ள முதல் பரிசு விழுந்திருப்பது இதுவே முதல் முறை
Image Credit : x

ரூ.1 கோடி மதிப்புள்ள முதல் பரிசு விழுந்திருப்பது இதுவே முதல் முறை

கடந்த 6 மாதங்களாக லாட்டரி கடை நடத்தி வரும் நரேஷ் மோங்கா, இதற்கு முன்பும் தனது கடையில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் விழுந்துள்ளதாகக் குறிப்பிட்டார். இருப்பினும், ரயில் நிலையத்திற்கு அருகே கடையை மாற்றிய பிறகு, தனது கடை மூலமாக ஒருவருக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள முதல் பரிசு விழுந்திருப்பது இதுவே முதல் முறை என்று அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
இந்தியா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
உலகின் டாப் 10 மாசடைந்த நகரங்கள்.. லிஸ்ட்டில் 7 இந்திய இடங்கள்.. டெல்லி இல்லை!
Recommended image2
Petrol Price 1947: 1947-ல் பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா? இப்போது ரூ.100-ஐத் தாண்டியது ஏன்?
Recommended image3
PM Kisan 24th Installment: பிஎம் கிசான் பணம் இந்த மாசம் எந்த தேதியில வரும்? அரசு அறிவிப்பு!
Related Stories
Recommended image1
உலகின் டாப் 10 மாசடைந்த நகரங்கள்.. லிஸ்ட்டில் 7 இந்திய இடங்கள்.. டெல்லி இல்லை!
Recommended image2
Petrol Price 1947: 1947-ல் பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா? இப்போது ரூ.100-ஐத் தாண்டியது ஏன்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved