கே.சி. வேணுகோபால் மூலம் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் பணத்தை பெற்றதாகவும், பிரியங்கா காந்தியின் தனி உதவியாளர் சதாப் கான் என்பவர் மூலம் இந்தப் பேச்சுவார்த்தைகள் மற்றும் பணப் பரிமாற்றங்கள் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஹரியானாவில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஹரியானாவின் பாவல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தருவதற்காக, ஹரியானா மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளரிடம் இருந்து சுமார் 7 கோடி ரூபாய் வரை காங்கிரஸ் வசூலித்ததாக பாஜக பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளரின் கணவர் வெளியிட்ட வாட்ஸ் அப் உரையாடல்களில் பணப்பரிமாற்றம் நடந்த ஆதாரங்கள் உள்ளதாகவும் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி, சோனியா காந்தி
அதாவது காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் மூலம் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் பணத்தை பெற்றதாகவும், பிரியங்கா காந்தியின் தனி உதவியாளர் சதாப் கான் என்பவர் மூலம் இந்தப் பேச்சுவார்த்தைகள் மற்றும் பணப் பரிமாற்றங்கள் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
வாட்ஸ் அப் ஆதாரங்கள்
இது தொடர்பாக பேசிய பிரதீப் பண்டாரி, ''ஹரியானாவின் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரே உண்மையை அம்பலப்படுத்தி, பொதுமக்களுக்குக் கொண்டு வந்துள்ளார். பிரியங்கா வதேரா, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கே.சி. வேணுகோபாலை ஒரு முன்னணியாக எவ்வாறு பயன்படுத்தினர் என்பதை வாட்ஸ்அப் அரட்டைகள் வெளிப்படுத்துகின்றன. ராகுல் காந்திக்கு மிக நெருக்கமானவராகக் கருதப்படும் அதே கே.சி. வேணுகோபால், பிரியங்கா வதேரா மற்றும் காந்தி குடும்பத்தினர். அவரை ஒரு முன்னணியாகப் பயன்படுத்தி, காங்கிரஸ் தொண்டர்களில் ஒருவரான ஹரியானா மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளரிடமிருந்து, பவால் தொகுதியை வழங்குவதாக வாக்குறுதி அளித்து, ரூ.7 கோடியை மிரட்டி பணம் பறித்தனர்'' என்று தெரிவித்துள்ளார்.


