MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தவெகவுடன் கூட்டணி உறுதி..! காங்கிரஸ் எடுத்த சர்வேயால் ராகுல் குஷி..! ச.மூ.பவனில் பிரியாணி விருந்து..!

தவெகவுடன் கூட்டணி உறுதி..! காங்கிரஸ் எடுத்த சர்வேயால் ராகுல் குஷி..! ச.மூ.பவனில் பிரியாணி விருந்து..!

தவெகவுடன் கூட்டணிக்கு வாய்ப்புள்ளது என்ற தகவல், தவெக தலைவர் விஜய் ஆதரவு காங்கிரஸ் மாநில நிர்வாகிகளுக்கு தெரிய வந்ததும், அவர்கள் குஷியாகி இருக்கின்றனர்.

2 Min read
Author : Thiraviya raj
Published : Feb 14 2026, 12:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ராகுல் காந்தியிடம் சர்வே
Image Credit : x

ராகுல் காந்தியிடம் சர்வே

ஆட்சியில் பங்கு இல்லை என முதல்வர் ஸ்டாலின் கூறியதால் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆட்சியில் பங்கு என வலியுறுத்தி வரும் காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தேசிய தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் ஆகியோர் ஓரிரு நாட்களுக்கு முல் டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து பேசியுள்ளனர். தவெகவுடன் கூட்டணி அமைத்தால், தமிழகத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும் தொகுதிகள், இரண்டாம் இடத்தை கைப்பற்றும் தொகுதிகள் சர்வே விபரங்களை ராகுல் காந்தியிடம் அப்போது பிரவீன் சக்கரவர்த்தி ஒப்படைத்துள்ளார்.

24
ஸ்டாலினால் கடுப்பான ராகுல்
Image Credit : Asianet News

ஸ்டாலினால் கடுப்பான ராகுல்

இது குறித்து, காங்கிரஸ் தரப்பினர் கூறுகையில், ‘‘பொது மேடை ஒன்றில், ஆட்சியில் பங்கு தர முடியாது' என பகிரங்கமாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததை, ராகுல் காந்தி ஏற்றுக் கொள்ளவில்லை. தன்னை ஸ்டாலின் முதல்வர் அவமதித்து விட்டதாக கருதுகிறார். ஏற்கனவே, காங்கிரசுக்கு சாதகமாக உள்ள 125 தொகுதிகளின் பட்டியலை வார் ரூம் நிர்வாகிகள் தயாரித்து வைத்திருந்தனர். அதிலிருந்து 70 தொகுதிகளை தேர்வு செய்து தருமாறு வார் ரூம் நிர்வாகிகளுக்கு தமிழக தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Articles

Related image1
மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 அக்கவுண்டில் வரவில்லையா? கவலை வேண்டாம்.. உடனே இதை செய்யுங்கள்!
34
வேணுகோபால் விஜய் சந்திப்பு
Image Credit : Asianet News

வேணுகோபால் விஜய் சந்திப்பு

அந்த தொகுதிகளின் பட் டியலை தவெகவிடம் வழங்கி, கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சு நடத்தும் பொறுப்பு, காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபாலிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. வரும் 17ம் தேதி சென்னை வருகிறார் வேணுகோபால். தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பெயர் மாற்றத்தை கண்டித்து, காங்கிரஸ் நடத்தும் பேரணியில் பங்கேற்கிறார். அப்போது, தவெக விஜயை சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளது’’ என்கின்றனர்.

44
காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு பிரியாணி விருந்து
Image Credit : Asianet News

காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு பிரியாணி விருந்து

தவெகவுடன் கூட்டணிக்கு வாய்ப்புள்ளது என்ற தகவல், தவெக தலைவர் விஜய் ஆதரவு காங்கிரஸ் மாநில நிர்வாகிகளுக்கு தெரிய வந்ததும், அவர்கள் குஷியாகி இருக்கின்றனர். நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் வழக்கத்திற்கு மாறாக பிரபல அசைவ ஹோட்டலில் இருந்து மட்டன் பிரியாணி வரவழைத்து, தடபுடல் விருந்து சாப்பிட்டுள்ளனர். வேணுகோபால் தலைமையில் நடக்கிற பேரணியை, வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு உரிய பணிகளில் காங்கிரசார் ஈடுபட்டுள்ளனர்.

About the Author

TR
Thiraviya raj
விஜய் (நடிகர்)
இந்திய தேசிய காங்கிரஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 அக்கவுண்டில் வரவில்லையா? கவலை வேண்டாம்.. உடனே இதை செய்யுங்கள்!
Recommended image2
காலையிலேயே பள்ளி மாணவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! சனிக்கிழமை அதுவுமா இன்று பள்ளிகள் முழு நேரம் செயல்படும்.!
Recommended image3
சரசரவென சரிந்த தக்காளி, வெங்காயம் விலை.! அள்ளிச்செல்லும் இல்லத்தரசிகள்.. காய்கறிகளின் நிலவரம் என்ன?
Related Stories
Recommended image1
மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 அக்கவுண்டில் வரவில்லையா? கவலை வேண்டாம்.. உடனே இதை செய்யுங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved