MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 அக்கவுண்டில் வரவில்லையா? கவலை வேண்டாம்.. உடனே இதை செய்யுங்கள்!

மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 அக்கவுண்டில் வரவில்லையா? கவலை வேண்டாம்.. உடனே இதை செய்யுங்கள்!

Magalir Urimai Thogai:  தமிழ்நாடு அரசு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் வங்கி கணக்கில் திடீரென ரூ.5000 வரவு வைத்துள்ளது. இந்த தொகை கிடைக்காத பெண்கள் புகார் அளிப்பது எப்படி?

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 14 2026, 10:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
திமுக தேர்தல் வாக்குறுதி
Image Credit : Google

திமுக தேர்தல் வாக்குறுதி

தமிழகத்தில் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. இதனையடுத்து 2023ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு சார்பில் மகளிர் உரிமை தொகையாக தகுதியான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒவ்வொறு மாதமும் 15ம் தேதி அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

25
மகளிர் உரிமை தொகை
Image Credit : x

மகளிர் உரிமை தொகை

பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்களுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் 1.16 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்து வந்தனர். மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால் பல லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து விதிமுறைகள் தளர்த்தப்பட்டு டிசம்பர் மாதம் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதாவது புதிதாக 16,94,339 பேர் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டதை அடுத்து பயனாளிகளின் எண்ணிக்கை 1,30,69,831 ஆக உயர்ந்தது.

Related Articles

Related image1
சரசரவென சரிந்த தக்காளி, வெங்காயம் விலை.! அள்ளிச்செல்லும் இல்லத்தரசிகள்.. காய்கறிகளின் நிலவரம் என்ன?
Related image2
காலையிலேயே மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 வரவு.. உடனே உங்க அக்கவுண்டை செக் பண்ணுங்க..
35
மகளிர் வங்கி கணக்கில் ரூ.5000 வரவு
Image Credit : tndipr

மகளிர் வங்கி கணக்கில் ரூ.5000 வரவு

இந்நிலையில் நேற்று காலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 1.30 கோடி மகளிர் வங்கி கணக்கில் திடீரென ரூ.5000 வரவு வைக்கப்பட்டது. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு.

45
இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
Image Credit : tndipr

இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்

பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3000 + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2000! 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் நேற்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. வெல்லும் தமிழ்ப் பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம். திராவிட மாடல் 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம். இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி என தெரிவித்திருந்தார்.

55
ரூ.5000 கிடைக்காதவர் என்ன செய்ய வேண்டும்?
Image Credit : our own

ரூ.5000 கிடைக்காதவர் என்ன செய்ய வேண்டும்?

வங்கி கணக்கில் ரூ.5000 வரவு வைக்கப்பட்டதும் அந்த பணத்தை எடுப்பதற்காக பொதுமக்கள் வங்கியில் குவிந்தனர். இந்நிலையில் மகளிர் தொகை கிடைக்காத பெண்கள் ராணிப்பேட்டை வட்டாச்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாதந்தோறும் ரூ.1000 பெற்று வரும் பயனாளிகளுக்கு ரூ.5000 கிடைக்காதவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கலாம். அப்படி இல்லாவிட்டால் cmhelpline.tnega.org என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மகளிர் உரிமைத் தொகை
மு. க. ஸ்டாலின்
திமுக
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
காலையிலேயே பள்ளி மாணவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! சனிக்கிழமை அதுவுமா இன்று பள்ளிகள் முழு நேரம் செயல்படும்.!
Recommended image2
சரசரவென சரிந்த தக்காளி, வெங்காயம் விலை.! அள்ளிச்செல்லும் இல்லத்தரசிகள்.. காய்கறிகளின் நிலவரம் என்ன?
Recommended image3
அவசர அவசரமாக மகளிருக்கு ரூ.5000... ஸ்டாலினுக்கு ரூட் போட்டுக் கொடுத்த பாஜக..! மெகா ட்விஸ்ட்..!
Related Stories
Recommended image1
சரசரவென சரிந்த தக்காளி, வெங்காயம் விலை.! அள்ளிச்செல்லும் இல்லத்தரசிகள்.. காய்கறிகளின் நிலவரம் என்ன?
Recommended image2
காலையிலேயே மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 வரவு.. உடனே உங்க அக்கவுண்டை செக் பண்ணுங்க..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved