MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சரசரவென சரிந்த தக்காளி, வெங்காயம் விலை.! அள்ளிச்செல்லும் இல்லத்தரசிகள்.. காய்கறிகளின் நிலவரம் என்ன?

சரசரவென சரிந்த தக்காளி, வெங்காயம் விலை.! அள்ளிச்செல்லும் இல்லத்தரசிகள்.. காய்கறிகளின் நிலவரம் என்ன?

காய்கறி சந்தைகளில் எதை வாங்குகிறார்களோ இல்லையோ முக்கியமாக தக்காளி மற்றும் வெங்காயத்தை அதிகளவு வாங்கி செல்வார்கள். ரசம் முதல் பிரியாணி சமைப்பதற்கு முக்கியம்.

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 14 2026, 07:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
சமையலுக்கு ருசியை கொடுக்கும் தக்காளி வெங்காயம்
Image Credit : our own

சமையலுக்கு ருசியை கொடுக்கும் தக்காளி வெங்காயம்

சமையலுக்கு ருசியை அளிக்கொடுப்பது காய்கறிகளை விட தக்காளி, வெங்காயம் தான். இவையெல்லாம் எந்த உணவையும் டேஸ்டாக சமைப்பது இயலாத காரியம். எனவே காய்கறி சந்தைகளில் மக்கள் எதை வாங்குகிறார்களோ இல்லையோ முக்கியமாக தக்காளி மற்றும் வெங்காயத்தை அதிகளவு வாங்கி செல்வார்கள். ரசம் வைப்பது முதல் பிரியாணி சமைப்பது வரை இந்த இரண்டின் தேவையும் மிக அதிகம். எனவே தக்காளி, வெங்காயத்தின் விலை சரிந்திருந்தால் போதும் கூடை, கூடையாக வாங்கி செல்வார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
சரசரவென சரிந்த வெங்காயம்
Image Credit : Google

சரசரவென சரிந்த வெங்காயம்

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தக்காளி பெட்டி பெட்டியாக தமிழகம் முழுவதும் உள்ள காய்கறி சந்தையில் குவிந்து வருகிறது. அதேபோல் வெங்காயத்தின் வரத்தும் அதிகரித்ததால் மூட்டை மூட்டையாக நாசிக் உள்ளிட்ட இடங்களில் இருந்து தமிழகத்திற்கு லாரிகளில் வந்தது. இதனால் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையானது போட்டி போட்டு குறைந்து வருகிறது. தற்போது 4 முதல் 5 கிலோ வெங்காயம் ரூ.100 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

36
தக்காளி விலை நிலவரம்
Image Credit : our own

தக்காளி விலை நிலவரம்

அதேபோல் தக்காளியும் விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காத நிலை நீடித்து வருகிறது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடும் நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் தக்காளி ஒரு கிலோ 20 முதல் 22 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் பை நிறைய தக்காளி மற்றும் வெங்காயத்தை வாங்கி செல்கின்றனர். மேலும் பச்சை காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளதால் சந்தோஷத்தில் உள்ளனர்.

46
கோயம்பேடு காய்கறி சந்தை
Image Credit : Asianet News

கோயம்பேடு காய்கறி சந்தை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 25 முதல் 24 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 63 முதல் 70 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 20 முதல் 22 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 50 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ30 முதல் 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 56 முதல் 62 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 46 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 முதல் 35 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

56
காய்கறிகளின் விலை நிலவரம்
Image Credit : our own

காய்கறிகளின் விலை நிலவரம்

பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 68 முதல் 90 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 முதல் 130 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 13 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 30 முதல் 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 முதல் 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 120 முதல் 140 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 46 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

66
கிடு கிடுவென உயர்ந்த வெண்டைக்காய்
Image Credit : Asianet News

கிடு கிடுவென உயர்ந்த வெண்டைக்காய்

பீன்ஸ் ஒரு கிலோ 40 முதல் 45 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 46 முதல் 51 ரூபாய்க்கும், பூசணி ஒரு 15 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 முதல் 60 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 முதல் 27 ரூபாய்க்கும், கோவைக்காய் 25 முதல் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
காய்கறி விலை
தக்காளி
வெங்காயம்
தக்காளி விலை
தக்காளி மற்றும் வெங்காயத்தின் இன்றைய விலை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Crop Loan: விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! பயிர்க் கடன் வசூல் முற்றிலும் நிறுத்தம் – தமிழ்நாடு அரசு அதிரடி!
Recommended image2
Now Playing
தவெகவிற்கு வாக்களிக்க மக்கள் தயார் இல்லை ! - தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இ.பி.எஸ் பேச்சு!
Recommended image3
Rooftop Solar Subsidy: சோலார் மின்சாரம் அமைக்க ரூ.1 லட்சம் வரை மானியம்: 10 நாட்களில் 16,500 பேர் விண்ணப்பம் குவிந்தன!
Related Stories
Recommended image1
காலையிலேயே மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 வரவு.. உடனே உங்க அக்கவுண்டை செக் பண்ணுங்க..
Recommended image2
தமிழகத்தில் இன்று ரவுண்ட் கட்டும் கனமழை? எந்தெந்த மாவட்டங்களில்! பனிபொழிவு எப்படி இருக்கும்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved