Viral video : பிரதமர் மோடியின் தாயார் ஓவியத்தை தத்ரூபமாக வரைந்த மாற்றுத்திறனாளி - வைரல் வீடியோ

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் ஓவியத்தை மிக அழகாக வரைந்துள்ளார் கோவையை சேர்ந்த  மாற்றுத்திறனாளி ஒருவர்.

Share this Video

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது மறைவை ஒட்டி கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று மதியம் தீப அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற உள்ளது.

இதில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உட்பட பாஜகவினர் பலர் கலந்து கொள்ள உள்ளனர். அஞ்சலி நிகழ்விற்கான ஏற்பாடுகள் அங்கு நடைபெற்று வரும் நிலையில் அம்மன்குளம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான சங்கர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஹீராபென் ஓவியத்தை தரையில் தத்ரூபமாக வரைந்துள்ளார்.

இதையும் படிங்க.. திமுக ஒரு குடும்ப கட்சி.. தமிழ்நாடு பாதுகாப்பான கைகளில் இல்லை! - திமுகவை வெளுத்து வாங்கிய ஜே.பி நட்டா

இதையும் படிங்க.. AIADMK : திமுக போல அதிமுக ஒன்றும் ராஜபரம்பரை கிடையாது.. வாரிசு அரசியலை அட்டாக் செய்த சி.வி சண்முகம்

Related Video