திமுக ஒரு குடும்ப கட்சி.. தமிழ்நாடு பாதுகாப்பான கைகளில் இல்லை! - திமுகவை வெளுத்து வாங்கிய ஜே.பி நட்டா

நாடு பாதுகாப்பான கைகளில் உள்ளது. ஆனால் தமிழ்நாடு பாதுகாப்பான கைகளில் இல்லை.திமுக ஒரு குடும்ப கட்சி. - பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி நட்டா.

bjp president jp nadda against speech dmk

பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி நட்டா இன்று கோவை வந்தார். காலையில் அவர் கோட்டை மேடு ஈஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதாக திட்டமிடப்பட்டு இருந்தது. 

அவர் கோவை வருகையில் தாமதம் ஏற்பட்டதால் ஈஸ்வரன் கோவிலில் தரிசனம் செய்யும் நிகழ்ச்சி மட்டும் ரத்து செய்யப்பட்டது. கோவை மேட்டுப்பாளையத்தில் பாஜக சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்றார்.

bjp president jp nadda against speech dmk

இதையும் படிங்க.. TN BJP : துபாய் ஹோட்டலில் 150 பேரு முன்னாடி.! உண்மையை சொல்லுங்க அண்ணாமலை? காயத்ரி ரகுராம் பகீர்!

அப்போது பேசிய அவர், தமிழகம் பழமையான மொழி, கலாச்சாரம் கொண்ட மாநிலம் ஆகும். இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி தமிழ்நாடு. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் ஏழைகளின் வாழ்வில் மாற்றம் கொண்டு வந்துள்ளோம். விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 வழங்கப்படுகிறது. இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. நம்பிக்கையான முன்னேற்றத்தை பார்த்து வருகிறோம்.

bjp president jp nadda against speech dmk

இந்தியாவின் கொரோனா தடுப்பூசிகள் உலகம் வியந்து பாராட்டிய ஒன்று ஆகும்.நாடு பாதுகாப்பான கைகளில் உள்ளது. ஆனால் தமிழ்நாடு பாதுகாப்பான கைகளில் இல்லை. திமுக ஒரு குடும்ப கட்சி. அவர்கள் மாநில நலனுக்காக எதுவும் செய்யமாட்டார்கள். பாஜக மக்களை இணைக்க பாடுபடுகிறது. திமுக மக்களை பிரிக்க பாடுபடுகிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் மாற்றம் நிகழும் என்று திமுகவை கடுமையாக குற்றஞ்சாட்டி பேசியுள்ளார் ஜே.பி நட்டா.

இதையும் படிங்க.. AIADMK : பாஜக வேண்டாம்.. கதறிய சீனியர்கள்! கடுப்பான எடப்பாடி பழனிசாமி - அதிமுக கூட்டத்தில் நடந்தது என்ன?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios