TN BJP : துபாய் ஹோட்டலில் 150 பேரு முன்னாடி.! உண்மையை சொல்லுங்க அண்ணாமலை? காயத்ரி ரகுராம் பகீர்!
காயத்ரி ரகுராம் தொடர்ந்து தமிழக பாஜக மீது பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறார்.
பாஜகவில் படு ஆக்டிவாக இருந்தவர் நடிகையும், டான்ஸ் மாஸ்டருமான காயத்ரி ரகுராம். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆன பிறகு, இவருக்கும், காயத்ரி ரகுராமுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது என்று கூறப்பட்டது.
பிறகு பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார் காயத்ரி. சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்பும் கூட காயத்ரி தொடர்ந்து தமிழக பாஜக மீது பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறார். தற்போது காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு தமிழக பாஜகவில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நான் அலிஷா அப்துல்லாவுக்கு உறுதியாக நிற்கிறேன். அவளுக்கு என் ஆதரவு. உங்கள் முதுகுக்குப் பின்னால் பாஜக இருப்பது உங்கள் அதிர்ஷ்டம். எனக்கும் இதே மாதிரியான சம்பவம் நடந்தது. ஆனால் எனக்கு அண்ணாமலை உட்பட யாரும் ஆதரவாக இல்லை. எனக்கும்,கட்சி அலுவலகத்தில் இருந்து செய்தியாளர் சந்திப்பு நடத்த அலிஷாவை தலைவர் ஆதரித்த போது.. ஏன்? என்னை போன்ற பெண்களை சமமாக நடத்த முடியாது?
இதையும் படிங்க.. DMK Vs BJP : 'தம்பி மல! பில்லு இன்னும் வரல'.. அண்ணாமலையை வம்புக்கு இழுத்த திமுகவினர் - வைரல் போஸ்டர்!
எனது இடைநீக்கம் ஒரு பொருட்டாகவே எடுக்கப்பட்டுள்ளது. எனது அரசியல் கேரியரை விட சமூக நீதி மற்றும் பெண்களின் நேர்மை முக்கியம். நான் தவறு செய்தால் பதவி விலகத் தயார். உண்மை வெல்லும் வரை, நீதி வெல்லும் வரை போராடுவேன். என்னிடமும் எல்லா ஆதாரமும் உள்ளது. எனது பிரச்சினையில் மௌனம் சாதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
தலைவர் அண்ணாமலை சபரிமலைக்கு மாலை அணிந்துள்ளதால், அவர் தற்போது பொய் சொல்ல முடியாது. துபாய் ஹோட்டலில் என்னைப் பற்றி 150 பேர் முன்னிலையில் கேவலமாகப் பேசினீர்கள் அல்லது பகிரங்கமாக அந்த குற்றச்சாட்டை மறுக்க விரும்புகிறீர்கள் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள். அல்லது எனது இடைநீக்கம் சாதாரணமாக எடுக்கப்பட்டதா?.
பெண்களின் நேர்மையை இழிவுபடுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனது குடும்பத்தினர் தினமும் கேள்விகளை எதிர்கொண்டு வேதனையில் ஆழ்ந்துள்ளனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அலிஷா அப்துல்லாவுக்கும் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். எனக்கு வேண்டியது விசாரணை மட்டுமே. எந்த பெண்ணும் இதை எதிர்கொள்ளக்கூடாது என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க.. Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு யாருக்கு, எப்போது கிடைக்கும் ? டோக்கன் வாங்குவது எப்படி ? முழு தகவல்கள்!