MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • பாஜகவுடன் கூட்டணி..? டாராய் போட்டுடைத்த தவெக... திமுக பார்த்த சகுனி வேலை..?

பாஜகவுடன் கூட்டணி..? டாராய் போட்டுடைத்த தவெக... திமுக பார்த்த சகுனி வேலை..?

களத்தில் கொள்கை ரீதியாக மோதத் துணிவில்லாதவர்கள், குறுக்கு வழியில் ஒரு கட்சியின் வளர்ச்சியைத் தடுக்க முயல்வது அவர்களின் பலவீனத்தையே காட்டுகிறது.

2 Min read
Author : Thiraviya raj
Published : Mar 16 2026, 05:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
திமுக வின் 'வதந்தி அரசியல்'
Image Credit : Asianet News

திமுக-வின் 'வதந்தி அரசியல்'

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி மிக வேகமாக நகர்ந்து வரும் வேளையில், பொய்ச் செய்திகளும் வதந்திகளும் அனல் பறக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை ஆளுங்கட்சியான திமுக-வின் தூக்கத்தைக் கெடுத்துள்ளதோ என்கிற ஐயத்தை அண்மைக்கால நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இதனைப் பறைசாற்றும் விதமாக, தவெக-வின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான சி.டி.ஆர். நிர்மல் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை, திமுக-வின் 'வதந்தி அரசியல்' முகத்திரையைக் கிழித்துள்ளது.

24
கூட்டணி பொய்கள் திட்டமிட்ட சதி
Image Credit : Asianet News

கூட்டணி பொய்கள் திட்டமிட்ட சதி

சமீபகாலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் ஒரு திட்டமிட்ட செய்தி பரப்பப்பட்டு வருகிறது. அதாவது, தமிழக வெற்றிக் கழகம், பாஜக அல்லது அதிமுக-வுடன் கூட்டணி வைக்கப் போவதாகவும், திருமதி சசிகலா மற்றும் பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா ராமதாஸ் ஆகியோருடன் ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் செய்திகள் உலாவுகின்றன. இதனை முற்றிலுமாக மறுத்துள்ள சி.டி.ஆர். நிர்மல் குமார், இத்தகைய செய்திகள் "அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டுப் பரப்பப்படும் பொய்கள்" எனச் சாடியுள்ளார். எந்தவொரு அரசியல் கட்சித் தலைவருடனும், எந்த மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Related image1
சசிகலா, ராமதாசுடன் தவெக கூட்டணியா? ஒரே போடு போட்டு அரசியல் அரங்கை அதிரவிடும் CTR நிர்மல்குமார்
34
திமுக-வின் பழைய உத்தி..!
Image Credit : Asianet News

திமுக-வின் பழைய உத்தி..!

கடந்த காலங்களில் இதேபோன்ற உத்திகளைப் பயன்படுத்தி, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் தவெக-வைத் தொடர்புபடுத்தி வதந்திகளைப் பரப்பினர். அவை அனைத்தும் காலப்போக்கில் பொய் என்பது நிரூபணமானது. இப்போது மீண்டும் அதே பாணியில் வதந்திகளைப் பரப்புவது, பொதுமக்களிடையேயும் தவெக தொண்டர்களிடையேயும் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தவே என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, இந்த ஆதாரமற்ற செய்திகளுக்குப் பின்னால் திமுக-வினர் இருப்பதை அவர் வெளிப்படையாகவே சுட்டிக்காட்டியுள்ளார்.

44
அரசியல் முதிர்ச்சியற்ற செயல்!
Image Credit : X

அரசியல் முதிர்ச்சியற்ற செயல்!

களத்தில் கொள்கை ரீதியாக மோதத் துணிவில்லாதவர்கள், குறுக்கு வழியில் ஒரு கட்சியின் வளர்ச்சியைத் தடுக்க முயல்வது அவர்களின் பலவீனத்தையே காட்டுகிறது. "வாய்மையே வெல்லும்" என்கிற வாசகத்தோடு, பொறுப்புள்ள ஊடகங்கள் செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் வதந்திகளைப் பகிர வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தனித்து நிற்கும் போக்கும், அதன் அதிரடி நகர்வுகளும் ஆளுங்கட்சிக்கு பெரும் சவாலாக மாறியுள்ளன. இந்தச் சூழலில், கூட்டணி என்ற பெயரில் வதந்திகளைப் பரப்பி, ஒரு கட்சியின் நம்பகத்தன்மையைக் குறைக்க முயல்வது தமிழக அரசியலில் தரம் தாழ்ந்த செயலாகவே பார்க்கப்படுகிறது. சி.டி.ஆர். நிர்மல் குமாரின் இந்த அதிரடி அறிக்கை, வதந்திகளைப் பரப்பும் கும்பலுக்கு விழுந்த பலமான சவுக்கடியாகக் கருதப்படுகிறது.

About the Author

TR
Thiraviya raj
விஜய் (நடிகர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijay: மொத்தமும் மாறப்போகுது.! சீமான் - தளபதி கூட்டணி கன்பார்ம்.?! அண்ணனுக்காக முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்கும் விஜய்.!
Recommended image2
ஈரான் - அமெரிக்கா இடையேயான போர்..! ஆட்டத்தை தலைகீழாக மாற்றிய ஈரானின் 5 வியூகங்கள்
Recommended image3
தமிழகமா..? போதை மாஃபியாக்களின் வேட்டைக்காடா..? திமுக அரசின் முகத்திரையைக் கிழிக்க அதிமுக அறைகூவல்..!
Related Stories
Recommended image1
சசிகலா, ராமதாசுடன் தவெக கூட்டணியா? ஒரே போடு போட்டு அரசியல் அரங்கை அதிரவிடும் CTR நிர்மல்குமார்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved