Asianet News TamilAsianet News Tamil

Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு யாருக்கு, எப்போது கிடைக்கும் ? டோக்கன் வாங்குவது எப்படி ? முழு தகவல்கள்!

பொங்கல் பரிசு தொகுப்பு யாருக்கு கிடைக்கும் என்றும், டோக்கன் எவ்வாறு வாங்குவது என்பதையும் இங்கு காணலாம்.

Tamilnadu govt pongal gift token distribution full details here
Author
First Published Dec 25, 2022, 9:22 PM IST

பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 ரொக்கம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், 2023 ஆம் ஆண்டு தைப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடிட, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000/- ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

பொங்கல் பரிசு தொகுப்பு:

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை 2 ஆம் தேதி சென்னையிலும், அன்றைய தினமே மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ரேஷன் அட்டைதாரர்கள் வரும் 2ஆம் தேதி முதல் பொங்கல் பரிசை பெற்றுக் கொள்ளலாம். இருப்பினும் அனைவருக்கும் இந்த பரிசுத் தொகை கிடைக்காது என்று தெரிய வந்துள்ளது.

Tamilnadu govt pongal gift token distribution full details here

இதையும் படிங்க.. உத்தவ் தாக்கரேவுக்கு நடந்தது உதயநிதி ஸ்டாலினுக்கும் நடக்கும் ; அண்ணாமலை சொன்ன பிளாஷ்பேக் !!

யாருக்கு கிடைக்கும்?:

பொங்கல் பரிசாக வழங்கப்படும் இந்த ரூ.1000 ரொக்கம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஆகியவை அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். சர்க்கரை அட்டை வைத்து உள்ளவர்களுக்கு இது கிடைக்காது. தமிழ்நாட்டில் மொத்தம் 5 வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன.அதில் 3 வகையான கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்கும்.

PHH, PHH-AAY, NPHH ஆகிய 3 வகையான அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பிய கிடைக்கும்.NPHH-S கார்டினை வைத்திருப்பவர்களுக்கு சர்க்கரை மட்டுமே கிடைக்கும். NPHH-NC  கார்டினை வைத்திருப்பவர்களுக்கு  எந்த பொருளும் ரேஷன் கடைகளில் கிடைக்காது. இந்த இரண்டு வகையான ரேசன் அட்டைகளை வைத்திருப்பவர்களுக்குப் பொங்கல் பரிசு எதுவும் கிடைக்காது.

எப்போது கிடைக்கும்?:

ஒவ்வொரு ரேஷன் கடை பணியாளர்களும் நாள் ஒன்றுக்கு 100 முதல் 200 வரையிலான நபர்கள் பெறுவதற்கு ஏற்ப டோக்கன்களை விநியோகிப்பார்கள். ரேஷன் கடைகளில் வழக்கம் போல, கைரேகை வைத்தால் மட்டுமே பொங்கல் பரிசு கிடைக்கும். பொங்கல் பரிசுப்பொருட்களை பெறுவதற்கான டோக்கனை ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் விநியோகிக்கப்பட உள்ளது.

எனவே மக்கள் அந்தந்த தேதிகளில் எந்தவித கூட்டமின்றி எளிதான முறையில் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பான ரூ.1,000, பச்சரிசி மற்றும் சக்கரை போன்றவை பெறலாம். இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு இணங்க பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, பனை வெல்லம் போன்றவை வழங்கலாமா ? என்று ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க.. வாரிசு இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசாத தளபதி விஜய் - திமுகவை வம்புக்கு இழுக்கும் விஜய் ரசிகர்கள்!

Follow Us:
Download App:
  • android
  • ios