உத்தவ் தாக்கரேவுக்கு நடந்தது உதயநிதி ஸ்டாலினுக்கும் நடக்கும் ; அண்ணாமலை சொன்ன பிளாஷ்பேக் !!
பொய் சொல்லவே சில பேர் கோவை கிளம்பி வருகின்றனர். பொய் சொல்லவே அமைச்சர்கள் வருகின்றனர். - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
இன்ஸ்டிடியூட் ஆஃப் சாட்டர்ட் அக்கவுண்டண்ட்ஸ் ஆஃப் இந்தியா சார்பில் மெகா பட்டய கணக்காளர்களின் மாணவர் மாநாடு, கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது, ‘மாணவர்களின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சி. நாடே உங்கள் மூலம் அடுத்த கட்டத்திற்கு செல்லும். ஹீமேன் போல பறந்தோ,இயேசுநாதர் போல தண்ணீரில் நடந்திடவோ முடியாது.
தோல்வியில் இருந்து விழுந்து தான் வர முடியும். உங்கள் உடம்பில் உள்ள தழும்புகளை மறந்துவிடாதீர்கள்.தோல்வியில்லாமல் வெற்றி அமைந்ததாக சரித்திரம் இல்லை என்று பேசினார்.பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை டீசல் விலை குறைப்பதாக தெரிவித்தனர். முழுவதுமாக பொருளாதார நிலைமையை தெரிந்துதான் ஆட்சிக்கு வந்தார்கள்.
பொருளாதார நிபுணர்கள் அமெரிக்காவில் பட்டப் படிப்பு படித்தவர்கள் என சொல்கிறார்கள். சொன்னதை செய்யவில்லை என்பது தான் பாஜகவின் கேள்வி. வேறு மாநிலத்தில் பாஜக சொல்லவில்லை, ஆனால் செய்தார்கள். உத்தரபிரதேசம், புதுச்சேரியில் எவ்வளவு குறைத்துள்ளார்கள் என்பதை நாம் பார்க்கிறோம். 2014 இல் பாஜக ஆட்சிக்கு வரும்பொழுது 67% கேஸ் பயன்படுத்தி வந்தனர். இன்று 99.3% பேர் கேஸ் பயன்படுத்துகின்றனர். பயன்பாடு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க.. Kamal : ராகுல் நேருவின் கொள்ளுப்பேரன்.. நான் காந்தியின் கொள்ளுப்பேரன் - டெல்லியில் மாஸ் காட்டிய கமல் ஹாசன்!
இந்தியாவிற்கு கேஸ் பெட்ரோல் எங்கு குறைந்த விலைக்கு கிடைக்கிறதோ, அங்கு வாங்குவோம். அமெரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் இணைத்து பார்க்கையில் விலை எவ்வளவு உள்ளது என்று ஒப்பீடு செய்து பார்க்க வேண்டும். மின்சாரத்தில் மத்திய அரசு விலை ஏற்றியதாக ஒரு லெட்டர் காட்டுங்கள். விண்டு எனர்ஜி, சோலார் முதல் யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக உள்ளது தமிழ்நாடு இருக்கிறது.
எவ்வளவு வட்டி கட்டுகிறீர்கள், நஷ்டத்திற்கு காரணம் என்ன என்ற 20 பக்கத்தை விட்டால் மக்கள் கூட்டி கழித்தால் தெரிந்து விடும். ஒரு மெகா வாட்டுக்கு, திருப்பூரில் 20 லட்சம் கமிஷன் கேட்கின்றனர். பெயர் மாற்றத்திற்கு 10 லட்சம் வாங்குகின்றனர். தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்மாக சொல்லியுள்ளது 3500 மெகாவாட் போடுவோம் என, ஆனால் 300 மெகாவாட் கூட இல்லை. ஒயிட் பேப்பர் கொடுங்கள். ஐஏஎஸ் அலுவலர்களை கேட்டால் உண்மையை சொல்வார்கள்.
பொய் சொல்லவே சில பேர் கோவை கிளம்பி வருகின்றனர். பொய் சொல்லவே அமைச்சர்கள் வருகின்றனர். ராகுல் காந்தி நடைப்பயணம் மக்களுக்கு பொழுதுபோக்கு. காங்கிரஸ்காரர்கள் சண்டை போட்டால் வலது இடது என இடத்தில் நிறுத்திக் கொள்கிறார். நடை பயணத்தின் முடிவை நாம் பார்க்கிறோம் தேர்தலில். இந்தியாவைப் பிரிக்கக் கூடியவர்களை வைத்து சுற்றித் திரிகிறார். ஆனால் அவருக்கு அது ஃபிட்டாக அமைந்துள்ளது. எச்சைஸ் ஆக அமைந்துள்ளது. கூட சென்ற காங்கிரஸ்காரர்களும் ஃபிட் ஆக உள்ளனர்.
மக்களுக்கு பயனில்லை. மத்திய அரசு 2023 வரைக்கும் ஏழைகளுக்கான உணவு 2 லட்சம் கோடி ரூபாய் வரை செலவு அதிகப்படுத்தி உள்ளனர். 83 கோடி மக்கள் ஏழைகளுக்கான உணவுத் திட்டத்தில் பயன் அடைகின்றனர். இதையாவது தமிழக அரசு உருப்படியாக மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது பாஜகவின் வேண்டுகோள். போன வருஷம் கருப்பு கொடுத்தீங்க இந்த வருடம் கரும்பு கொடுக்கவில்லை. பனைவெல்லத்தை ஆரம்பிக்கிறோம் என்றீர்கள் ஆனால் பொங்கலுக்கு கொடுத்திருக்கலாமே.
எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஐயாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றீர்கள். இன்னைக்கு நீங்கள் என்ன ஆயிரத்தி சில்லறை கொடுக்கிறீர்கள். ஆகவே இது பொங்கல் தொகுப்பு அல்ல பொய் தொகுப்பு. எ.வ வேலு ஏன் சக்கரை பொங்கல் கொடுக்கிறோம் என்றால் அப்போதுதான் சர்க்கரைப் பொங்கல் வைத்து சாப்பிடுவார்கள் என அபத்தமாக தெரிவிக்கிறார். இது அரசுக்கு எந்தவித பிரயோஜனமும் இல்லை மக்களின் கோபத்திற்கு ஆளாகுகிறார்கள்.
இந்த ஆட்சியில் ஏன் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஏன் அரிசியும் சக்கரையும் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. போனவருடம் ஏன் வெல்லம் கொடுத்தீர்கள் தெரியாது. ஏன் எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஐயாயிரம் என்றீர்கள் சும்மா சொன்னோம். மக்கள் 2024 இல் முடிவுரை எழுதுவார்கள் திமுகவிற்கு. உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆகி விட்டார் பார்ப்போம். அங்கு உத்தவ் தாகரே அமைச்சராகியதும் என்ன ஆனது என்று பாருங்கள் என்று கூறினார்.
இதையும் படிங்க..ஏக்நாத் ஷிண்டே முதல் ரிஷி சுனக் வரை.. 2022ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட அரசியல்வாதிகள்!