MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • செங்கல் முதல் செங்கோல் வரை.. உதயநிதி ஸ்டாலின் குறித்து நீங்கள் அறியாத 10 சுவாரஸ்யங்கள்!

செங்கல் முதல் செங்கோல் வரை.. உதயநிதி ஸ்டாலின் குறித்து நீங்கள் அறியாத 10 சுவாரஸ்யங்கள்!

10 Surprising Facts About Udhayanidhi Stalin: தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குறித்து நீங்கள் அறியாத 10 சுவாரஸ்யங்கள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Mar 19 2026, 03:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
உதயநிதி ஸ்டாலின்
Image Credit : X

உதயநிதி ஸ்டாலின்

திமுகவில் முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்து அக்கட்சியின் வருங்காலமாக பார்க்கப்படுபவர் உதயநிதி ஸ்டாலின். சினிமாவில் நடிகராக வாழ்க்கையை தொடங்கிய அவர், தந்தை ஸ்டாலின், தாத்தா கலைஞர் கருணாநிதி போன்று அரசியலில் கால்பதித்தார். வாரிசு என்பதால் மட்டுமின்றி தனது திறமையின் மூலம் சிறப்பாக செயல்பட்டு இளைஞரணிச் செயலாளர், எம்.எல்.ஏ, அமைச்சர், துணை முதல்வர் என அரசியல் பயணத்தில் குறுகிய காலத்தில் உச்சம் தொட்டவர் உதயநிதி. உதயநிதி ஸ்டாலின் குறித்து நீங்கள் அறியாத 10 சுவாரஸ்யங்கள் குறித்து பார்க்கலாம்.

25
1. செங்கல் ரகசியம்
Image Credit : Asianet News

1. செங்கல் ரகசியம்

2021 சட்டமன்றத் தேர்தலின்போது மக்களை திமுக பக்கம் சாய்த்தது உதயநிதி கையில் ஏந்திய அந்த எய்ம்ஸ் (AIIMS) செங்கல் தான். ம‌துரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாததை வெறும் பேச்சாகச் சொல்லாமல், அந்த செங்கல்லை எடுத்து காட்டி அவர் வாக்கு சேகரித்தது, தமிழக அரசியலில் வித்தியாசமாக இருந்தது மட்டுமின்றி, திமுக வெற்றி பெற திருப்பு முனையாகவும் அமைந்தது.

2. எளிமையான உடை விரும்பி

கோடிக்கணக்கான சொத்துகள் கொண்ட குடும்பத்தில் பிறந்திருந்தாலும், துணை முதல்வர் என்ற உச்சத்தை தொட்டாலும் உதயநிதி எப்போதும் எளிமையான உடை அணிவதையே வழக்கமாக வைத்துள்ளார். அவர் பெரும்பாலும் வெள்ளை நிற சட்டை (White Cotton Shirt) மற்றும் பேண்ட் அணிவதையே விரும்புகிறார். பிரசாரங்களின் போது அவர் அணியும் திமுகவின் சின்னமான உதயசூரியன் பொறிக்கப்பட்ட 'டி-சர்ட்'கள் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது.

Related Articles

Related image1
இபிஎஸ்ஸின் 'பாசிடிவ்' ரகசியம்.. கைவிடாத குலதெய்வம்.. வியக்க வைக்கும் பின்னணி!
Related image2
சிஎஸ்கே அணியை வாங்கும் உதயநிதி..! இத்தனை ஆயிரம் கோடியா..? ஐபிஎல் கிரிக்கெட்டில் பரபர ட்விஸ்ட்..!
35
3. வீட்டு சாப்பாட்டு என்றால் உயிர்
Image Credit : X

3. வீட்டு சாப்பாட்டு என்றால் உயிர்

உதயநிதி வெளியூர்களுக்குச் சென்றால் கூட ஆடம்பர ஹோட்டல்களைத் தவிர்த்து, கட்சி நிர்வாகிகள் வீட்டில் சமைக்கப்படும் சாதாரண உணவையே விரும்பி உண்பார் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். அசைவ உணவுகளை விரும்பி உண்பாராம்.

4. 7ம் எண் மீது சென்டிமென்ட்

உதயநிதி கடவுள் மறுப்பு கொள்கை கொண்டவர், ஜோதிடங்கள் மீது நாட்டமில்லாதவர் என்றாலும் 7 என்ற எண்ணின் மீது அவருக்கு ஒரு தனிப்பட்ட செண்டிமெண்ட் உண்டு என கூறப்படுகிறது. அவரது பல முக்கிய முடிவுகள் அல்லது வாகன எண்களில் இந்த எண்ணின் தாக்கம் இருப்பதாக நெருக்கமானவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 7 அவரது லக்கி எண்னாக கருதப்படுகிறது.

5. உடற்பயிற்சியில் நாட்டம்

அரசியலில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதை உதயநிதி தவற விடுவதில்லையாம். காலை, மாலை என எப்போது கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதை உதயநிதி வழக்கமாக வைத்துள்ளதாக கூறுகிறார்கள். உடல்நலனை பராமரிப்பதில் மிகவும் அக்கறை கொண்டவர்.

45
6. பழைய நண்பர்களை மறக்காத பண்பு
Image Credit : X

6. பழைய நண்பர்களை மறக்காத பண்பு

உதயநிதி அரசியல் வாரிசாக இருந்தாலும் சினிமா அவருக்கு நிறைய நண்பர்களை பெற்றுக் கொடுத்தது. சந்தானம், ஆர்யா ஆகியோரை இதற்கு உதாரணமாக சொல்லலாம். துணை முதல்வர் ஆன போதிலும் பழைய நண்பர்களை மறக்காத உதயநிதி, வார இறுதி நாட்களில் அவர்களுடன் நேரம் செலவிட்டு, ஜாலியாக பேசுவதை உதயநிதி வழக்கமாக வைத்துள்ளதாக கூறுகிறார்கள்.

7. கிரிக்கெட் பிரியர்

உதயநிதி ஒரு கிரிக்கெட் பிரியர் என்பதை விட வெறியர் என்றே சொல்லலாம். சிஎஸ்கே போட்டிகளை விரும்பி பார்ப்பார். சென்னை சேப்பாகக்த்தில் சிஎஸ்கே போட்டி என்றால் தவறாமல் ஆஜராகி விடுவார். அவர் விளையாட்டுத் துறை அமைச்சராக தமிழகத்தில் விளையாட்டுத் துறையில் பல்வேறு திட்டங்கள், சாதனைகள் செய்ததற்கு அவரது கிரிக்கெட் விருப்பம் ஒரு அடிப்படை காரணமாக அமைந்தது.

55
9. வாசிப்புப் பழக்கம்
Image Credit : our own

9. வாசிப்புப் பழக்கம்

அரசியலில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை வைத்துள்ளார் உதயநிதி. தந்தை மற்றும் தாத்தாவைப் போலவே திராவிடக் கொள்கைகள் சார்ந்த புத்தகங்கள் மற்றும் சமூகப் போராட்டங்கள் குறித்த வரலாற்றுப் புத்தகங்களை வாசிப்பதில் அவருக்கு ஆர்வம் உண்டு.

10. பந்தா இல்லாத மனிதர்

பெரிய அரசியல் செல்வாக்கு கொண்ட குடும்பத்தில் பிறந்திருந்தாலும், துணை முதல்வராக உயர்ந்தாலும் எந்தவித பந்தா இல்லாமல் தொண்டர்களுடன் சகஜமாக உரையாடுவார். நண்பர்களிடத்திலும் மிகவும் எளியாக பழகுவாராம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
அரசியல் சுவாரஸ்யம்
உதயநிதி ஸ்டாலின்
திமுக
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
Latest Videos
Recommended Stories
Recommended image1
பள்ளி மாணவி கொலை வழக்கில் கைதான குற்றவாளி குறித்து பகீர் தகவல்.. போட்டோ வெளியானது
Recommended image2
Now Playing
தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை.. பண்டிகைகளுக்கு முதலமைச்சர் வாழ்த்து சொல்வதில்லை
Recommended image3
Now Playing
ஜெயிப்போமா? மாட்டோமான்னு நீங்கதான் சொல்லனும்.. பிடி கொடுக்காமல் நழுவிச்சென்ற கமல்ஹாசன்
Related Stories
Recommended image1
இபிஎஸ்ஸின் 'பாசிடிவ்' ரகசியம்.. கைவிடாத குலதெய்வம்.. வியக்க வைக்கும் பின்னணி!
Recommended image2
சிஎஸ்கே அணியை வாங்கும் உதயநிதி..! இத்தனை ஆயிரம் கோடியா..? ஐபிஎல் கிரிக்கெட்டில் பரபர ட்விஸ்ட்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved