MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இபிஎஸ்ஸின் 'பாசிடிவ்' ரகசியம்.. கைவிடாத குலதெய்வம்.. வியக்க வைக்கும் பின்னணி!

இபிஎஸ்ஸின் 'பாசிடிவ்' ரகசியம்.. கைவிடாத குலதெய்வம்.. வியக்க வைக்கும் பின்னணி!

எந்த ஒரு அரசியல் தலைவரின் வாழ்க்கையிலும் ஏற்றங்களும் உண்டு. இறக்கங்களும் உண்டு. அரசியல் வாழ்க்கையில் எத்தனையோ சோதனைகள் வந்தபோதிலும் குலதெய்வ வழிபாடு பாசிடிவ் எனர்ஜி கொடுப்பதாக இபிஎஸ் நம்புகிறார். 

2 Min read
Author : Rayar r
Published : Mar 18 2026, 03:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
Image Credit : X

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகத்தின் முதல்வராக இருந்தவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் இபிஎஸ், 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் அரியணையில் ஏற தேர்தல் பணிகளில் பம்பரமாக ஈடுபட்டு வருகிறார். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த எடப்பாடி பழனிசாமி, தனது உழைப்பால் அதிமுகவில் சாதாரண தொண்டனாக இருந்து பொதுச்செயலாளராக உயர்ந்துள்ளார்.

24
ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட இபிஎஸ்
Image Credit : our own

ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட இபிஎஸ்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போன்று எடப்பாடி பழனிசாமியும் ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர். இபிஎஸ் சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தைச் சேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இவரது குலதெய்வம் ஓமலூர் அருகே உள்ள பூசாரிப்பட்டி சென்றாயப் பெருமாள் ஆகும். தனது சிறு வயது முதல் குலதெய்வ கோயிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ள இபிஎஸ், தமிழகத்தின் முதலவராக ஆன போதிலும் குலதெய்வத்தை மறக்காமல் அங்கு சென்று வழிபாடு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

Related Articles

Related image1
NDA கூட்டணியில் விஜய் வேண்டாம்.. முட்டுக்கட்டை போடும் இபிஎஸ்?.. பின்னணி என்ன?
Related image2
'சூப்பர் ஸ்டார்' ரஜினிக்காக களமிறங்கிய இபிஎஸ்.. ஆதவ் அர்ஜுனாவை ஆஃப் செய்த அதிரடி பதில்!
34
குலதெய்வ வழிபாடுக்கு முக்கியத்துவம்
Image Credit : our own

குலதெய்வ வழிபாடுக்கு முக்கியத்துவம்

தன்னுடைய அரசியல் வாழ்வின் எந்த ஒரு முக்கிய முடிவை எடுப்பதற்கு முன்பும், இபிஎஸ் தனது குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்துவதை வழக்கமாக கொண்டிருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். தமிழக முதல்வராகப் பதவியேற்பதற்கு முன்பும் சரி, அதிமுகவின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றபோதும் சரி, முதலில் குலதெய்வக் கோயிலில் சிறப்புப் பூஜைகள் செய்த பின்னரே அடுத்தகட்டப் பணிகளைத் தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி.

44
கையில் கயிறு அணியும் பழக்கம் கொண்டவர்
Image Credit : ADMK

கையில் கயிறு அணியும் பழக்கம் கொண்டவர்

எந்த ஒரு அரசியல் தலைவரின் வாழ்க்கையிலும் ஏற்றங்களும் உண்டு. இறக்கங்களும் உண்டு. அரசியல் வாழ்க்கையில் எத்தனையோ சோதனைகள் வந்தபோதிலும் குலதெய்வ வழிபாடு பாசிடிவ் எனர்ஜி கொடுப்பதாக இபிஎஸ் நம்புகிறார். இதேபோல் இபிஎஸ் எப்போதும் கையில் கயிறு அணிந்திருப்பதை நீங்கள் பார்க்கலாம். 

குலதெய்வ வழிபாட்டில் நம்பிக்கை கொண்ட இபிஎஸ் அங்கு வழிபாடு செய்த பிறகு கயிறுகளை அணிந்து கொள்கிறார். ஒவ்வொரு குறிப்பிட்ட இடைவெளியிலும் அந்த கயிறுகளை மாற்றி வருகிறார் இந்த கயிறு அணிவதன் மூலம் தனக்கு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும் எனவும் தோல்வியிலிருந்து இந்த கயிறுகள் பாதுகாக்கும் எனவும் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையாக உள்ளது.

வீட்டு உணவு பிரியர்

இது மட்டுமின்றி எடப்பாடி பழனிசாமி அதிகாலையில் எழும் பழக்கம் கொண்டவர் இதன் மூலம் அவருக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது. அரசியலில் பெரிய பதவிகள் பெற்ற போதிலும் வீட்டுக்கு செல்லும்போதெல்லாம் விவசாய பணிகளை மேற்கொள்வதை எடப்பாடி பழனிசாமி வழக்கமாக கொண்டிருந்தார். 

மேலும் எவ்வளவு பிஸியாக இருந்த போதிலும் வீட்டு உணவுகளை தான் எடப்பாடி பழனிசாமி அதிகம் விரும்பி உண்டு வந்தார் அவரது உணவு பட்டியலில் களி, கம்பங்கூழ் போன்ற நமது பாரம்பரிய உணவுகளும் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
அரசியல் சுவாரஸ்யம்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
Latest Videos
Recommended Stories
Recommended image1
விளம்பரமா..? செயல்பாடா..? சவுராஷ்டிரா சமூகத்தில் யாருக்கு வாய்ப்பு..? திமுகவை வீழ்த்த பாஜகவின் பவர் கணக்கு..!
Recommended image2
4 இடங்களில் மட்டுமே வெற்றி.! இளைஞரிடம் படுதோல்வியை சந்தித்த ஜெயலலிதா.! தமிழ்நாட்டை அதிர வைத்த 1996 தேர்தல்.!
Recommended image3
பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களுக்கு நடனமாட தடை... திடீர் நடவடிக்கைக்கு காரணம் என்ன?
Related Stories
Recommended image1
NDA கூட்டணியில் விஜய் வேண்டாம்.. முட்டுக்கட்டை போடும் இபிஎஸ்?.. பின்னணி என்ன?
Recommended image2
'சூப்பர் ஸ்டார்' ரஜினிக்காக களமிறங்கிய இபிஎஸ்.. ஆதவ் அர்ஜுனாவை ஆஃப் செய்த அதிரடி பதில்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved