AIADMK : திமுக போல அதிமுக ஒன்றும் ராஜபரம்பரை கிடையாது.. வாரிசு அரசியலை அட்டாக் செய்த சி.வி சண்முகம்

தலைவர்கள் இறப்பிற்கு பிறகு தான் அதிமுகவில் தலைவர்கள் வருகிறார்கள். ஆனால் திமுகவில் அப்படியில்லை கடுமையாக குற்றஞ்சாட்டி உள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம்.

Admk mp cv shanmugam open up dmk varisu politics

விழுப்புரம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பல்வேறு பொய்யான முனையப்பட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.திமுகவில்  தற்போது அமைச்சராக உள்ள 13 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் லஞ்ச ஒழிப்புதுறை மூலம் பதியப்பட்டு நீதிமன்றத்தில் விசாரனையில் இருக்கிறது.

திமுகவின் தொழில் துறை அமைச்சராக இருந்தவர் மீது 10 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின் திமுகவின் அமைச்சர் என்பதாலையே கந்தசாமி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விடுதலை செய்வதற்கு காரணமாக கந்தசாமியும் அந்தமாவட்டத்தின் லஞ்சஒழிப்பு துறை செயல்பட்டு உள்ளது.

Admk mp cv shanmugam open up dmk varisu politics

இதையும் படிங்க..ஏக்நாத் ஷிண்டே முதல் ரிஷி சுனக் வரை.. 2022ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட அரசியல்வாதிகள்!

அதிமுக அமைச்சர்கள் மீது விசாரனை நடைபெற்று கொண்டிருக்கும் போதே லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி கோட்டையில் தமிழக முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை பெற்று அவர் என்ன சொல்கிறாரோ அதனை செய்யும் துறையாக உள்ளது. லஞ்ச ஒழிப்பு துறை இன்றைக்கு அடியாட்கள் துறையாக உள்ளது. ஆளும் கட்சிக்கு ஒரு அளவு கோலாகவும், முன்னாள் அமைச்சருக்கு ஒரு அளவுகோலாக லஞ்ச ஒழிப்பு துறை செயல்பட்டு வருவதால் தன் போக்கை மாற்றி கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.கொலை கொள்ளை, கற்பழிப்பு , போதை பொருட்கள் அதிகரித்துள்ளது. லஞ்ச ஒழிப்பு துறை திருத்தி கொள்ள வேண்டும் திமுகவின் முன்னாள் அமைச்சர்களை காப்பாற்றி விடலாம் என நினைக்க வேண்டாம். வாரிசு அரசியல் என்பது எதனால் கூறப்படுகிறது கட்சியின் தலைமை வழி நடத்துபவர்கள் கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின், அதன்  பிறகு உதயநிதி என்று வருகிறது. அக்கட்சியில் அன்பழகன், துரைமுருகன் வீராசாமி போன்றவர்கள் இருந்தார்கள் அவர்களுக்கு தகுதியில்லையா ? திறமை இல்லையா ?

திமுகவில் டம்மி பீஸ் தான் பொன்முடி. அவருக்கு இருக்கும் பதவியை பிடிங்கி விட்டுருவார்கள் போல. அதனால் தான் என்னை பற்றி பேசி வருவதாகவும், அவருக்கு என்னை பற்றி பேச அருகதையும் தகுதியும் இல்லை என கூறினார். தலைவர்கள் இறப்பிற்கு பிறகு தான் அதிமுகவில் தலைவர்கள் வருகிறார்கள். திமுகவில் ராஜ பரம்பரை போல,  கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின் என்றும் உதயநிதி என்றும் பட்டம் சூட்டுபவர்கள் அதிமுகவினர் இல்லை என்று கடுமையாக பேசினார்.

இதையும் படிங்க.. AIADMK : பாஜக வேண்டாம்.. கதறிய சீனியர்கள்! கடுப்பான எடப்பாடி பழனிசாமி - அதிமுக கூட்டத்தில் நடந்தது என்ன?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios