தூத்துக்குடி பெரியசெல்வபுரம் பகதியை சேர்ந்தவர் வின்சென்ட், துறைமுக ஊழியர். இவர் தன்னுடைய மனைவி ஜான்சி மற்றும் குடும்பத்தினருடன் அப்பகுதியில் வசித்து வந்தார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 3ம் தேதி இவரது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 100 பவுன் நகை, 20 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளைபோனது. இது தொடர்பாக தாளமுத்து நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.