தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இருக்கிறது இளையரசனேந்தல் கிராமம். இங்கு புகழ்பெற்ற பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் இங்கு நடைபெறும் கொடைவிழாவில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் திரண்டு வழிபாடு செய்வார்கள். இந்த வருடத்திற்கான கொடைவிழா கடந்த வாரம் கால்நாட்டுடன் தொடங்கியது.

கடந்த 23ம் தேதி காலையில் கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து 12 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 6.30 மணிக்கு கோவிலில் 18-க்கு படிக்கு படிபூஜை நடைபெற்றது. பின் இரவு கருப்பசாமி குதிரையில் பவனி வரும் நிகழ்வு முடிந்த பிறகு சாமக்கொடை நடைபெற்றது. நேற்று காலையில் பக்தர்கள் அக்கினி சட்டி சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தி கோவில் வளாகத்தில் பொங்கலிட்டு வழிபட்டனர். பகல் 12 மணியளவில் பழ பூஜை நடைபெற்றது.

பின் சாமியார் அருள்வாக்கு சொல்லும் நிகழ்வு நடந்தது. இதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த 21 அரிவாள்கள் மீது ஏறிநின்று குறி கூறினார்.  அதைத்தொடர்ந்து அருள்வாக்கு கூறிய சாமியாருக்கு மிளகாய் அபிஷேகம் நடைபெற்றது. 68 கிலோ மிளகாய் தூள் கரைத்து சாமியார் மீது ஊற்றப்பட்ட பிறகு அன்னதானம் வழங்கப்பட்டது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நள்ளிரவில் பயங்கரம்..! லாரி ஓட்டுநர் ஓட ஓட விரட்டி வெட்டிப்படுகொலை..!