Asianet News TamilAsianet News Tamil

புரட்டாசி மாத பெளர்ணமி.. மழையை பொருட்படுத்தாமல் சதுரகிரி கோவிலில் குவிந்த மக்கள்..

புரட்டாசி மாத பெளர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
 

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இங்கு பெளர்ணமி, அமாவாசை, பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படும். 

மேலும் படிக்க:ஓபிஎஸ் அணிக்கு தாவிய மைத்ரேயன்..! அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கிய இபிஎஸ்

இந்நிலையில் புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 4 நாட்கள் சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விடுமுறை தினம் என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகாலை முதலே திரளான பக்தர்கள் வருகை தந்தனர். 

அதிகாலை லேசான சாரல் மழை பெய்ததால் ஒன்றரை மணி நேரம் தாமதமாக பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் படிக்க:”ஷாக்” அடிக்கும் கட்டணம்.. கூலி தொழிலாளி வீட்டில் ரூ.2.26 லட்சம் மின் கட்டணம்.. அதிர்ச்சியில் உறைந்த மக்கள்..

Video Top Stories