Asianet News TamilAsianet News Tamil

”ஷாக்” அடிக்கும் கட்டணம்.. கூலி தொழிலாளி வீட்டில் ரூ.2.26 லட்சம் மின் கட்டணம்.. அதிர்ச்சியில் உறைந்த மக்கள்..

ராமநாதபுரம் மாவட்டத்தில், கூலி தொழிலாளியின் வீட்டில் இரண்டு மாத மின் கட்டணம், 2.26 லட்சம் ரூபாயாக கணக்கீடு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Rs2.26 lakh electricity bill in Agriculture laborer house in Ramanathapuram
Author
First Published Oct 9, 2022, 11:55 AM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில், கூலி தொழிலாளியின் வீட்டில் இரண்டு மாத மின் கட்டணம், 2.26 லட்சம் ரூபாயாக கணக்கீடு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டையை பகுதியை சேர்ந்தவர் சகாய ஆரோக்கிய டேவிட். விவசாய கூலி தொழிலாளியான இவர் வெற்றிலை கொடிக்கால் பறிக்கும் கூடி தொழில் செய்து வருகிறார். 

மேலும் படிக்க:ஆர்எஸ்எஸ் சாதனையில் 10% கூட எந்த கட்சியும் செய்யவில்லை..! RSS பற்றி பொய்களை பரப்புகிறார்கள்- அண்ணாமலை வேதனை

இவரது வீட்டில் இரண்டு மாத மின் கட்டணமாக வழக்கமாக ரூ.160 யிலிருந்து ரூ.400 வரை மட்டுமே வரும் நிலையில் தற்போது மின் கட்டணம் 2 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக இவர் நெகுநாதபுரம் துணை மின் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் முத்துப்பேட்டை ஊராட்சிக்கு கடந்த 8 மாதங்களாக மின் கணக்கீட்டாளர் முறையாக மின் கணக்கீடு செய்ய வருவதில்லை என்றும் அதனால் தான் இந்த மாதிரி கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்றும் அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டுக்கின்றனர்.

மேலும் படிக்க:வயதான பெற்றோரை கவனிக்காத மகன்.. எழுதி வைத்த சொத்தை ரத்து செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

Follow Us:
Download App:
  • android
  • ios