ஆர்எஸ்எஸ் சாதனையில் 10% கூட எந்த கட்சியும் செய்யவில்லை..! RSS பற்றி பொய்களை பரப்புகிறார்கள்- அண்ணாமலை வேதனை

ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு தனக்கு இதுவரை கிடைக்கவில்லையென்று தெரிவித்த அண்ணாமலை, வாய்ப்பு கிடைக்கும்போது சிறப்பாக பணியாற்றுவேன் என கூறினார்

Annamalai lamented that lies are being spread about the RSS

அமைச்சர் உள்ளத்தில் இருப்பது வெளிப்பட்டுள்ளது

ட்விட்டரில் ஸ்பேஸ் நிகழ்ச்சி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுகவினரே சமூகநீதியை கடைபிடிப்பதில்லை. திமுக ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் என கூறினார். ஸ்டாலின் வீட்டில் சூப்பர் சி.எம். இருக்கின்றனர். அவர்கள் தான் அரசை இயக்கி வருவருவதாக தெரிவித்தார். ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்பது மட்டும் தான் அமைச்சர்களின் வேலை. திரைமறைவில் இருந்து சூப்பர் சி.எம்.களாக செயல்படுபவர்கள் தான் நன்றாக சம்பாதிப்பதாக குற்றம்சாட்டினார்.  தமிழ்நாட்டு அமைச்சர்கள் யாரும் அவர்களின் பணியை கவனமாக எடுத்துக் கொள்ளவில்லை என கூறிய அவர், அமைச்சர்களின் உள்ளத்தில் இருப்பதே, வார்த்தைகளாக வெளியில் வருகிறது. ஓசியில் தானே போகிறீர்கள் என்று கேட்பது அமைச்சரின் உள்ளத்தில் இருந்து வந்தது தான் என குறிப்பிட்டார்.  

Annamalai lamented that lies are being spread about the RSS

ஆர்எஸ்எஸ்யில் பணியாற்ற வாய்ப்பு

திமுகவினர் என்ன பேசினாலும் அது எப்படி சர்ச்சையாகிறது என்று திமுகவினரே என்னிடம் கேட்பதாக கூறிய அவர், திமுகவினர் பேசுவதெல்லாம் அனைவராலும் கவனிக்கப்படுவதால் தான் அது சர்ச்சையாகிறது என கூறினார். சமூகவலைதளங்களை அனைவரும் பயன்படுத்துவதால், இந்த ஆட்சியில் திமுகவினரின் உண்மைத்தன்மை எளிதில் அம்பலப்பட்டுவிடுகிறது எனவும் தெரிவித்தார்.  சமூகநீதி என்று பேருக்கு தான் திமுகவினர் ஆட்சி நடத்துவதாக விமர்சித்தார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு தனக்கு இதுவரை கிடைக்கவில்லையென்று தெரிவித்தவர், வாய்ப்பு கிடைக்கும்போது சிறப்பாக பணியாற்றுவேன் என கூறினார்.  இந்தியாவின் முக்கியமான 3 பகுதிகளான காஷ்மீர், பஞ்சாப், வடகிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட பிரச்சனைகளில் RSS தீவிரமாக சேவையாற்றியது. இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்திருப்பதற்கு காரணம் RSS தான் என பெருமை பட தெரிவித்தார்.

திமுக துணைப்பொதுச்செயலாளராக தேர்வானார் கனிமொழி..! புதிய நிர்வாகிகளின் பெயரும் அறிவிப்பு

Annamalai lamented that lies are being spread about the RSS

ஆர்எஸ்எஸ் வலிமையாக உள்ளது

இந்தியாவில் RSS செய்த சாதனையில் 10% கூட வேறு கட்சிகள் செய்ததில்லை. தனது சாதனைகளை, சேவைகளை என்றுமே RSS விளம்பரப்படுத்தியதில்லை. சேவை செய்வது மட்டுமே என் பணி என்று இருப்பது ஆர்எஸ்எஸ் தான் என கூறினார்.  RSS பற்றி அறியாதவர்கள் தான் பொய்களை பரப்பி வருவதாகவும், . இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும் வலிமையாக உள்ள இயக்கம் தான் RSS என குறிப்பிட்டார்.  மோடியின் ஆட்சியில் தான் யோகா, ஆயுர்வேதா போன்றவை உலகெங்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதென்றும் RSS-ஐ அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

இதையும் படியுங்கள்

உலகில் உள்ள மதங்களுக்கு எல்லாம் தாய் மதம் இந்து மதம்..! ஆங்கிலேயர்கள் தான் இந்து என பெயர் வைத்தனர்- அண்ணாமலை

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios