உலகில் உள்ள மதங்களுக்கு எல்லாம் தாய் மதம் இந்து மதம்..! ஆங்கிலேயர்கள் தான் இந்து என பெயர் வைத்தனர்- அண்ணாமலை

பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் இந்து வாழ்வியலை இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல முடிகிறது. ராஜராஜசோழன் இந்துவா என்பது தேவையில்லாத சர்ச்சை. இதனால் யாருக்கும் பயனில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Annamalai said that Hinduism is the mother religion of all religions in the world

டுவிட்டரில் உரையாற்றிய அண்ணாமலை

ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் இல்லையென்றும் ஆங்கிலேயர்கள் தான் இந்து மதம் என பெயர் வைத்ததாக வெளியான கருத்து பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதற்க்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டிவிட்டரில் உரையாற்றியுள்ளார். அதில் 13-வது அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தை இலங்கை அமல்படுத்த தவறிவிட்டது. இலங்கையின் செயல்பாடுகள் இந்தியாவுக்கு திருப்தியளிக்கவில்லை. இலங்கையின் அமைப்பில் இந்தியா எந்தவித சமரசத்தையும் செய்துகொள்ள விரும்பவில்லை. உக்ரைன் – ரஷ்யா போரில் இந்தியாவின் நிலைப்பாடு தான் சிறந்தது என்று ஐ.நா.சபையில் பல நாடுகள் தெரிவித்துள்ளன. இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு, பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்வுகாண முடியும். அதைத் தான் இந்தியா செய்து கொண்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் காய்கறி வாங்கிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் - வைரல் வீடியோ !

Annamalai said that Hinduism is the mother religion of all religions in the world

இலங்கையின் செயல்பாட்டில் திருப்தி இல்லை

இலங்கையும் நன்றாக இருக்க வேண்டும் ; இந்தியாவும் நன்றாக இருக்க வேண்டும். அதுவே மத்திய அரசின் நிலைப்பாடு என கூறினார். இலங்கையை சீனா போன்ற நாடுகள் ஆதிக்க களமாக பயன்படுத்துவதை இந்தியா ஏற்றுக்கொள்ளாது. தமிழ்நாட்டில் உள்ள சில தலைவர்கள் தமிழ்நாட்டு அரசிலும், இந்திய அரசிலும் ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது. இலங்கைக்கு எதிராகவும் இந்தியா வாக்களிக்கவில்லை. இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தால், அங்கு தமிழர்களின் உரிமைகள் பற்றி இந்தியாவால் பேச முடியாது என தெரிவித்தார். இலங்கை பிரச்சனைக்கு பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே தீர்வுகாண முடியும் என உறுதிபட தெரிவித்தார். 

பொன்னியின் செல்வன் குந்தவையாக மாறிய கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்.. அதிர்ச்சியில் தெலங்கானா முதல்வர் KCR !

Annamalai said that Hinduism is the mother religion of all religions in the world

ஆங்கிலேயர் வைத்த பெயர் இந்து

ராஜராஜசோழன் இந்துவா என்று சிலர் இன்று பேசுகின்றனர். இந்து வாழ்வியல் முறை, பஞ்சபூத ஆராதனை போன்றவற்றை தான் ராஜராஜசோழன் பின்பற்றினார். அதனால் அவர் இந்து தான். ராஜராஜசோழன் இந்துவா என்ற சர்ச்சைப்பேச்சு தான், இன்றைய இளைஞர்கள் மத்தியில் இந்து வாழ்வியல் முறையை எடுத்துச்செல்ல உதவுகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் இந்து வாழ்வியலை இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல முடிகிறது. ராஜராஜசோழன் இந்துவா என்பது தேவையில்லாத சர்ச்சை. இதனால் யாருக்கும் பயனில்லை என கூறினார்.  உலகில் உள்ள மதங்களுக்கெல்லாம் தாய் மதம் இந்து மதம். இந்து என்பது மதமல்ல. வாழ்வியல் முறை. பஞ்சபூதங்களை அடிப்படையாகக் கொண்ட வாழ்வியல் முறைக்கு, ஆங்கிலேயர்கள் தான் இந்து மதம் என்று பெயர் வைத்தனர் என அண்ணாமலை தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

சர்வாதிகாரத்தின் வடிவம் அவர்.. கீழ்த்தரமான பொதுக்குழு.! முதல் முறையாக எடப்பாடியை விளாசிய ஓ.பன்னீர்செல்வம் !

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios