சர்வாதிகாரத்தின் வடிவம் அவர்.. கீழ்த்தரமான பொதுக்குழு.! முதல் முறையாக எடப்பாடியை விளாசிய ஓ.பன்னீர்செல்வம் !

கட்சிக்கு ஒற்றை தலைமைதான் வேண்டும் என்று எடப்பாடி ஆதரவு நிர்வாகிகளும், இரட்டை தலைமை அல்லது ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்கு தலைமை தாங்க வேண்டும் என்று அவரது அணியை சேர்ந்த நிர்வாகிகளும், வலியுறுத்தி வருகின்றனர்.

Aiadmk o panneerselvam reply edappadi palanisamy conduct admk gc

2021 சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கு பின்னர் அதிமுக தோல்வியை தழுவியதால், மீண்டும் உட்கட்சிக்குள் பூசல் எழுந்தது. தற்போது அதிமுக உடைந்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பு, எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் கட்சியை உரிமை கொண்டாடி வருகிறது.

தற்போதைய நிலையில் கட்சி எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.கட்சிக்கு ஒற்றை தலைமைதான் வேண்டும் என்று எடப்பாடி ஆதரவு நிர்வாகிகளும், இரட்டை தலைமை அல்லது ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்கு தலைமை தாங்க வேண்டும் என்று அவரது அணியை சேர்ந்த நிர்வாகிகளும், வலியுறுத்தி வருகின்றனர்.

Aiadmk o panneerselvam reply edappadi palanisamy conduct admk gc

இதையும் படிங்க..‘முதலில் எருமை, அடுத்து மாடு.. இப்போ அதுவும் போச்சா.! அடுத்தடுத்து விபத்தில் சிக்கும் வந்தே பாரத் ரயில்’

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மாற்றுக் கட்சியிலிருந்து ஆயிரத்திற்கு மேற்பட்டோர் ஓபிஎஸ் அணியில் இணைந்தனர். அப்போது ஈபிஎஸ் அணியில் இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் என்பவரும் ஓபிஎஸ் அணியில் இணைந்தார்.

அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், ‘தலைவர் எம்ஜிஆர் கட்சியை உருவாக்கிய போது அவர் விதித்த சட்ட விதிகளை போல் மற்ற கட்சிகளை சட்ட விதிகள் இல்லை. தலைமை பொறுப்பை தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என சட்ட விதிகளை உருவாக்கியவர் எம்ஜிஆர்.

இதையும் படிங்க..திமுக பிளானை காப்பி அடித்த அண்ணாமலை.. அதே இடம், அதே நேரம்.. நம்ம லிஸ்ட்லயே இல்லையே !

Aiadmk o panneerselvam reply edappadi palanisamy conduct admk gc

அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவி தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி. இதனை தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டார். அதற்கு ஆதாரமாக 2026 ஆண்டு வரை வெற்றி படிவம் வழங்கினார்கள். ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியிலும் இது போன்ற கீழ்த்தரமான பொதுக்குழு நடக்கவில்லை.  செயலாளர் பதவிக்கு குறைந்தது 10 மாவட்ட செயலாளர்கள் முன் மொழிய வேண்டும்.

எந்த ஒரு சர்வாதிகார எண்ணமும் தலைமை பொறுப்பில் இருக்கக் கூடியவர்களுக்கு வரக்கூடாது என்பதற்காக தான் இது போன்ற சட்ட விதிகளை எம்ஜிஆர் உருவாக்கினார். அதுதான் தற்போது நடைபெறக்கூடிய தர்மயுத்தம். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் அதை தர்மமே வெல்லும்’ என்று எடப்பாடி தரப்பை கடுமையாக விமர்சித்தார் ஓபிஎஸ்.

இதையும் படிங்க..‘ஈபிஎஸ் அணியில் இருந்து ஓபிஎஸ் அணிக்கு தாவிய முக்கிய விக்கெட்.. அதிர்ச்சியில் எடப்பாடி தரப்பு !’

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios