சென்னை மயிலாப்பூரில் காய்கறி வாங்கிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் - வைரல் வீடியோ !

சென்னை மயிலாப்பூரில் சாலையோர கடையில் காய்கறிகளை வாங்கினார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

When Finance Minister Sitharaman Went To Vegetable Market In Chennai

மத்திய நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன், பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக இன்று சென்னை வந்திருந்தார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அன்றைய நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இரவு மயிலாப்பூர் மார்க்கெட்டை பார்வையிட்டார்.

When Finance Minister Sitharaman Went To Vegetable Market In Chennai

இதையும் படிங்க..திமுக பிளானை காப்பி அடித்த அண்ணாமலை.. அதே இடம், அதே நேரம்.. நம்ம லிஸ்ட்லயே இல்லையே !

அந்த நேரத்தில், அவர் காய்கறி விற்கும் விற்பனையாளர்களுடன் உரையாட சந்தைக்குச் சென்றார். அவர்கள் என்ன பிரச்சினைகளைக் கையாளுகிறார்கள் என்பதை அறிய விரும்பி அங்கு சென்றார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். இதுகுறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலக ட்விட்டர் பக்கத்தில்பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..‘முதலில் எருமை, அடுத்து மாடு.. இப்போ அதுவும் போச்சா.! அடுத்தடுத்து விபத்தில் சிக்கும் வந்தே பாரத் ரயில்’

அதில், ‘சென்னைக்கு தனது நாள் நீண்ட பயணத்தின் போது, ​​மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மயிலாப்பூர் சந்தைக்கு சென்று, அங்குள்ள விற்பனையாளர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளுடன் உரையாடினார். பிறகு அவர்களிடம் காய்கறிகளை வாங்கினார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்  நிர்மலா சீதாராமன்  காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதையும் படிங்க..பொன்னியின் செல்வன் குந்தவையாக மாறிய கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்.. அதிர்ச்சியில் தெலங்கானா முதல்வர் KCR !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios