தனது வயதான பெற்றோரை கவனிக்காத மகனுக்கு பெற்றோர் எழுதி வைத்த சொத்துக்களின் பத்திரங்களை ரத்து செய்ய உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  

தனது வயதான பெற்றோரை கவனிக்காத மகனுக்கு பெற்றோர் எழுதி வைத்த சொத்துக்களின் பத்திரங்களை ரத்து செய்ய உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஓய்வு பெய்ய விமான படை அதிகாரி தனது மூத்த மகன் தங்களை கவனிக்காததால் அவருக்கு தாங்கள் எழுதி வைத்த சொத்து பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

மேலும் அவர் தனது மனுவில், தனக்கு இடுப்பு பகுதியில் 4 அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய மனைவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எங்களை கவனிக்குமாறு உதவிக்கோரி ஆஸ்திரேலியாவில் உள்ள தங்களது மூத்த மகனை கேட்டோம். ஆனால் அவர் அதற்கு முன்வரவில்லை.

மேலும் படிக்க:ஆடு காணாமல் போனதில் மோதல்..! துப்பாக்கியால் சுட்டதில் விவசாயி துடி துடித்து பலி..! கோவையில் பரபரப்பு

என்னையும் எனது மனைவியையும் கடைசி காலத்தில் கவனித்துக் கொள்வதாக உறுதியளித்ததால் எங்களது சொத்துக்களை மூத்த மகனின் பெயருக்கு எழுதி வைத்தோம். ஆனால், உறுதியளித்தபடி நடக்காததால் அவர் பெயருக்கு எழுதி வைத்த சொத்து பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரித்த நீதிபதி ஆஷா,” நகைகளை விற்றும், சேமிப்புகளை கரைத்தும், தங்கள் மருத்துவ செலவுகளை தாங்களே கவனிக்க வேண்டிய நிலைக்கு பெற்றோர்களை தள்ளிய மகன்களின் செயல்பாடு இதயமற்றது'' என அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

மேலும் படிக்க:திமுக துணை பொதுச்செயலாளர் ஆனார் கனிமொழி.. கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு..

மேலும்”தந்தைக்கு மகனாற்றும் கடமை “ என்ற திருகுறளை சுட்டிக்காட்டி ”இது நம்முடைய சமூகத்தின் அடிப்படை பண்புகளை” எடுத்துக் காட்டுகிறது. ஆனால் தற்போது இந்த பண்பு வேகமாக அழிந்து வருவதற்கு உணர்த்தும் வகையில் இந்த வழக்கு சான்றாக அமைந்துள்ளது என்று வேதனை தெரிவித்தார். 

மேலும் கடந்த 2007ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டப்படி, கவனிக்காத குழந்தைகளுக்கு சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்ய பெற்றோருக்கு உரிமை உள்ளதாக உத்தரவு பிறப்பித்தார்.