திமுக துணை பொதுச்செயலாளராக கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுக்குழுவில் அறிவித்தார். சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, திமுக துணை பொதுச் செயலாளர் பதவிக்கு கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் திமுக துணைச் பொதுசெயலாளர்களாக ஐ.பெரியசாமி, பொன்முடி, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக முதன்மை செயலாளராக கே.என்.நேரு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முகமது சகி, கு.பிச்சாண்டி, வேலுச்சாமி, சரவணன் ஆகியோர் திமுக வின் தணிக்கை குழு உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.