- Home
- Lifestyle
- புரட்டாசி சனிக்கிழமைகளில் ஒன்றான இன்று..இந்த ஒரு பொருளை தானமாக கொடுத்தால், தீராத பணப் பிரச்சனை தீரும்..!
புரட்டாசி சனிக்கிழமைகளில் ஒன்றான இன்று..இந்த ஒரு பொருளை தானமாக கொடுத்தால், தீராத பணப் பிரச்சனை தீரும்..!
Arisi Thaana Palan in Tamil: புரட்டாசி சனிக்கிழமைகளில் இந்த ஒரு பொருளை தானமாக கொடுப்பதால், பணத்தட்டுப்பாடும், உணவு தட்டுப்பாடும் நமக்கு எப்போதுமே ஏற்படாது.

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தான தர்மங்களை செய்து முறைப்படி வாழ்ந்தால், அவனை எவ்வளவு கடினமாக துன்பங்கள் தாக்கினாலும் அதிலிருந்து மீண்டு வந்து விடுவான். அதுமட்டுமின்று, அவன் புகழ் தலைமுறைக்கும் பரவி இருக்கும். நம்முடைய வாழ்வில் தானம் கொடுப்பதும், இனமாக பொருட்களை வாங்குவதும் எல்லோரின் வாழ்க்கையில் சந்தித்திருப்போம். ஆனால், தானங்களில் எந்த தானத்தை நாம் செய்தால் நம் வாழ்வில் பணத்தட்டுப்பாடும், உணவு தட்டுப்பாடும் இன்றி வாழ்வோம் என்பதை பற்றிய தகவலை தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
ஒருவர், கடன் இல்லாமல் செல்வந்தர்களாவதற்கு, ஆன்மீக ரீதியாக தானம் செய்து பாருங்கள் பல்வேறு நன்மைகளை பெறலாம். குறிப்பாக இந்த புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடு செய்வது செல்வ செழிப்பை நமக்கு கொடுக்கும். அதாவது நீங்கள் கடன் இல்லாமல் வீடு, நகை வாங்குவதற்கு, பொன் பொருளை அள்ளி கொடுக்கும்.
இத்தனை சிறப்பு மிக்க தானங்களில் மிகவும் சிறந்த ஒரு தானமாக அரிசி தானம் விளங்குவது. இந்த நாளில் வீடு வீடாகச் சென்று பணம், அரிசி ஆகியவற்றை தானமாகப் பெறுவதும் உண்டு. பின், பணத்தை ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துவார்கள். தானமாக பெற்ற அரிசியை கொண்டு பொங்கல் செய்து படைத்து அனைவருக்கும் பிரசாதமாக வழங்குவார்கள்.
20 Things You Should Never Donate During Shradh
பெருமாளை குலதெய்வமாகக் கொண்டுள்ள சில குடும்பங்களில் புரட்டாசி மாதத்தில் வரும் ஒரு சனிக்கிழமையில் மாவிளக்கு ஏற்றி வணங்குவதும் வழக்கம். இடித்த பச்சரிசி, அச்சுவெல்ல பாகு, ஏலக்காய் ஆகியவற்றை கலந்து, அந்த மாவை அகலாக வடித்து, அதில் நெய் ஊற்றி விளக்கு ஏற்றி பெருமாளை வழிபடுவார்கள்.
புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்து பெருமாளை வழிபட்டால், திருமண தடைகள் நீங்கும். புரட்டாசி சனிக்கிழமை விரதமிருப்பதால் கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
மேலும் படிக்க...மறந்தும் கூட இந்த பொருட்களை எல்லாம் யாரிடமும் தானமாக வாங்க வேண்டாம்..? மீறினால் தரித்திரத்தை ஏற்படுத்தும்..