கூலிப்படையுடன் சென்று வீடுபுகுந்து தாக்குதல் நடத்திய திமுக கவுன்சிலரின் கணவர்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இடங்கனசாலை நகராட்சி 20வது வார்டு திமுக கவுன்சிலர் விஜயலட்சுமியின் கணவர் குமார் கூலிப்படையுடன் சேர்ந்து ரமேஷ் என்பரை வீடு புகுந்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Video

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே ரமேஷ் மற்றும் எதிர்வீட்டுக்காரர் இளங்கோவன் ஆகியோருக்கு இடையிலான பிரச்சினையில், இளங்கோவுக்கு ஆதரவாக இடங்கனசாலை நகராட்சி 20வது வார்டு திமுக கவுன்சிலர் விஜயலட்சுமியின் கணவர் குமார், கூலிப்படையினருடன் சென்று ரமேஷின் வீடுபுகுந்து தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் ரமேஷ் விரல்கள் முறிந்து, தலையில் காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக மகுடஞ்சாவடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Video