திருட்டு சம்பவம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கைது - கோவையில் அதிர்ச்சி சம்பவம்

திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Share this Video

கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் பொதுமக்கள் அதிக அளவு கூடும் இடங்களான ரயில் நிலையம் பேருந்து நிலையம் திருவிழாக்கள் மற்றும் பேருந்துகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிப்பதற்காக குழு அமைக்கப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கோவை வடக்கு மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஷ் மேற்பார்வையில், ஆர்.எஸ்.புரம் காவல் சரக கோவை மாநகர காவல் உதவி ஆணையாளர் ரவிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருமலையாம்பாளையம் பகுதியை சேர்ந்த திவாகர்(26), கண்ணையா (30), பார்வதி(67) முத்தம்மா(23), கீதா(24) ஆகிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாவர். இவர்கள் ஐவர் மீதும் கோவை மாநகரில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் மொத்தம் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்களிடமிருந்து 40 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..Annamalai: பாஜக நிர்வாகிகள் 5 பேர் அதிரடி நீக்கம்.. சாட்டையை சுழற்றிய அண்ணாமலை - அதிர்ச்சியில் பாஜக வட்டாரம்

இதையும் படிங்க..டேய் எப்புட்றா.. நாம் தமிழர் கட்சியில் இணைய திருமகன் ஈவெரா என்னை சந்தித்தார் - சீமான் பரபரப்பு பேச்சு

Related Video