Annamalai: பாஜக நிர்வாகிகள் 5 பேர் அதிரடி நீக்கம்.. சாட்டையை சுழற்றிய அண்ணாமலை - அதிர்ச்சியில் பாஜக வட்டாரம்
பாஜக நிர்வாகிகள் 5 பேர் கட்சி பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
சமீப காலமாக தமிழக பாஜகவில் உட்கட்சி பூசல் தொடர்ந்து நடந்து வருகிறது. அதனால் பாஜகவை சேர்ந்த பல்வேறு நபர்களை சஸ்பெண்ட் செய்து வருகிறார்கள். தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மேற்கு மாவட்டத்தில் 29.01.2023 அன்று மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
அப்பொழுது கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு பிரகாஷ் - மாவட்ட துணை தலைவர், மிண்ட் ரமேஷ் - மாநில செயலாளர், நெசவாளர் பிரிவு, சசிதரன் - மாவட்ட தலைவர்,பொருளாதார பிரிவு, புருஷோத்தமன் - மாநில பொதுக்குழு உறுப்பினர், சென்னை சிவா - மாநில செயற்குழு உறுப்பினர் ஆகிய பொறுப்பாளர்கள் களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க..Erode: ஈரோடு கிழக்கு தேர்தலில் பாஜக போட்டி? எடப்பாடி பழனிசாமி Vs ஓபிஎஸ் யாருக்கு ஆதரவு? - பாஜக முடிவு இதுதான்
இதனால், கட்சியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுகிறார்கள். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவை சேர்ந்த 5 நிர்வாகிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது பாஜக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையில் பாஜக நிர்வாகி ஒருவரை கட்சி செயற்குழு கூட்டத்தின்போதே சிலர் தாக்கிய நிலையில், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் அண்ணாமலை.
இதையும் படிங்க..டேய் எப்புட்றா.. நாம் தமிழர் கட்சியில் இணைய திருமகன் ஈவெரா என்னை சந்தித்தார் - சீமான் பரபரப்பு பேச்சு