Erode: ஈரோடு கிழக்கு தேர்தலில் பாஜக போட்டி? எடப்பாடி பழனிசாமி Vs ஓபிஎஸ் யாருக்கு ஆதரவு? - பாஜக முடிவு இதுதான்
பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா இருந்தார். இவர் கடந்த 4ம் தேதி காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27 ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கியது.திமுக கூட்டணி கட்சி வேட்பாளராக காங்கிரஸின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாந்த், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர்.இந்த தேர்தலில் பாஜக போட்டியிடலாம் என்ற தகவல்கள் வெளியாகின.
இதையும் படிங்க..இபிஎஸ். ஓபிஎஸ், டிடிவி தினகரன்..இபிஎஸ் போட்ட பிளான் - ஈரோடு கிழக்கு அதிமு வேட்பாளர் யார் தெரியுமா.?
அதோடு தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் பாஜக சார்பில் தொகுதிக்கான தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை என்பது பாஜக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்று உறுதிப்படுத்தி இருந்ததே என்று சொல்ல வேண்டும். திடீரென இந்த தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி அணி போட்டியிடுவதாக அறிவிக்க தமிழக பாஜக சற்று பின்வாங்கியது.
அதுமட்டுமின்றி எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என அதிமுகவை சேர்ந்த இரண்டு அணிகளும் தமிழக பாஜகவின் அலுவலகமான கமலாலயத்தில் சந்தித்து ஆதரவை கோரின. இந்த நிலையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாஜக ஆதரவு யாருக்கு என்பதை அண்ணாமலை நாளை அறிவிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய போது, அதிமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இடைத்தேர்தலில் போட்டியிட பெரும்பாலான பாஜக நிர்வாகிகள் விரும்புவதாகவும் தெரிவித்தார். எங்களின் முடிவுக்காக அதிமுக காத்திருக்கட்டும், அது தவறில்லை என்று கூறினார்.
இதையும் படிங்க..இனி இதுதான் ஆந்திராவின் தலைநகரம்.. முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது குவியும் புகார்கள் - பின்னணி என்ன?