இபிஎஸ். ஓபிஎஸ், டிடிவி தினகரன்..இபிஎஸ் போட்ட பிளான் - ஈரோடு கிழக்கு அதிமு வேட்பாளர் யார் தெரியுமா.?
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு பிப்ரவரி 27 ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
திமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்த தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுகிறது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம், நேற்று என 2 நாள் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். இன்றும் கட்சி நிர்வாகிகள் தேர்தல் தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர்.
இன்று வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்த்திருந்த சூழலில் நாளை வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரியார் நகர் பகுதியில் கழக நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி ஜெயலலிதா வழியில் ஒரு சிறப்பான ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமி அளித்தார்.
அவரது வழிகாட்டுதலின்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுகவினர் அமைதியான முறையில் சந்தித்து வருகின்றனர். வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று அதிமுகவின் எஃகு கோட்டை இத்தொகுதி என நிரூபிப்போம். ஓபிஎஸ், டிடிவி தினகரன் அணி தனித்துப் போட்டியிடுவதால் எங்கள் அணியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படாது.
இதையும் படிங்க..இந்த எச்சை பொழப்பு.. வெளியே வாடா.! போலீசை இழிவாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் - பரபரப்பு வீடியோ !
திமுக சார்பில் ஏராளமான அமைச்சர்கள் இடைத்தேர்தலில் களம் இறக்கப்படுவது வாடிக்கைதான். அதிமுக தொண்டர்கள் வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வெற்றி உறுதி செய்வார்கள். எங்களுக்கு இரட்டை இலை சின்னம் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். சிறந்த வழக்கறிஞர்கள் நியமித்துள்ளோம். எனவே எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் பாஜக ஆதரவு உள்ளதா இல்லையா என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.
தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு பிப்ரவரி ஏழு வரை நேரம் உள்ளது எனவே வேட்பாளர் கூட்டணி கட்சியினர் குறித்து எடப்பாடி பழனிச்சாமி விரைவில் அறிவிப்பார் என்று கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் பெயர் அடிபடுவதால் வேட்பாளர் அறிவிப்பதில் இழுபறி என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க..அரசியலை விட்டு விலக நான் தயார்.. ஒரிஜினல் வீடியோ இருக்கு! திமுகவுக்கு சவால் - அண்ணாமலை பரபரப்பு பேட்டி