இந்த எச்சை பொழப்பு.. வெளியே வாடா.! போலீசை இழிவாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் - பரபரப்பு வீடியோ !
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் காவல்துறையினரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சர்ச்சைக்குரிய வகையில் இழிவாக பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் காவல்துறையினரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சர்ச்சைக்குரிய வகையில் இழிவாக பேசி கோஷமிட்டது தொடர்பாக 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கடந்த 8 ஆம் தேதி அன்று இடம் தொடர்பான புகாரில் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்த விசிக-வின் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் ஆரணி காவல் நிலைய சப் - இன்பெக்டரை ஒருமையில் பேசியதாக குற்றசாட்டு எழுந்தது. மேலும், பாஸ்கரன் சப்- இன்ஸ்பெக்டரின் சாதியை குறிப்பிட்டு ஒருமையில் பேசியதாகவும் புகார் எழுந்தது.
இதையும் படிங்க..DMK: நல்ல பீஸா அனுப்பு.. பெண் புரோக்கரிடம் ஆபாசமாக பேசிய திமுக நிர்வாகி - வைரல் ஆடியோ கிளப்பிய சர்ச்சை
இந்நிலையில், அவரை கைது செய்த போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதனை தொடர்ந்து, நீதிமன்ற ஜாமீனில் வெளிவந்த அவரை கட்சி ஆதரவாளர்கள் ஆரணி பகுதியில் ஊர்வலமாக காரில் அழைத்து வந்தனர். அப்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், காவலர்களை பார்த்து கேவலமாக கோஷமிட்டபடி சென்றனர்.
இதனை செல்போனில் படம்பிடித்த காவலர்களையும் அநாகரீக வார்த்தைகளால் திட்டினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் உட்பட 50 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக விசாரிக்க 7 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் ஆரணியில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..Erode East bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்பாளரை அறிவித்தது நாம் தமிழர் கட்சி - யார் இந்த மேனகா.?
இதையும் படிங்க..பிபிசி ஆவணப்படம்.. அதானி! நீட்! இலங்கை - திமுக எம்பிக்களுக்கு அறிவுரை செய்த முதல்வர் ஸ்டாலின்!