Asianet News TamilAsianet News Tamil

பிபிசி ஆவணப்படம்.. அதானி! நீட்! இலங்கை - திமுக எம்பிக்களுக்கு அறிவுரை செய்த முதல்வர் ஸ்டாலின்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எப்படி செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக திமுக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

What are the issues DMK MPs should raise in the budget session? - Instruction of Chief Minister Stalin
Author
First Published Jan 29, 2023, 7:23 PM IST

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை மறுநாள் கூடுகிறது. நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு, முதல் நாள் உரையாற்றுகிறார். பின்னர் பொருளாதார ஆய்வு அறி0க்கை தாக்கல் செய்யப்படும்.

இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எப்படி செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக திமுக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு  தொடர்பான முக்கிய பிரச்னைகள் குறித்தும் அகில  இந்திய  அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள 2002ஆம் ஆண்டு நடந்த  குஜராத் வன்முறை குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப் பட சர்ச்சை குறித்தும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தினார்.

What are the issues DMK MPs should raise in the budget session? - Instruction of Chief Minister Stalin

இதையும் படிங்க..உத்திரமேரூர் கல்வெட்டு உலகமே வியக்கிறது.. மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம் !!

இந்த கூட்டம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்தும், அகில இந்திய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள குஜராத் வன்முறை குறித்த ‘பிபிசி’-யின் ஆவணப் படம் குறித்தும், இந்திய பங்குச் சந்தையில் அதானி குழுமத்தால் ஏற்பட்ட இழப்புகள் குறித்தும், இந்திய அரசமைப்பின் அடிப்படை பண்புகளை மாற்றி அமைக்கும் முயற்சியாக குடியரசு துணைத் தலைவர் உள்ளிட்ட சிலர் தெரிவிக்கும் தேவையற்ற கருத்துகள் குறித்தும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் உறுதியான வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், தமிழ்நாடு அரசால், ஒன்றிய அரசுக்கு எழுதப்பட்டுள்ள கடிதங்களின் நிலை குறித்தும் - முக்கியமாக நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவது; தமிழக மீனவர்கள்மீது இலங்கை அரசு தாக்குதல் நடத்துவது, கைது செய்வது, படகுகளை இலங்கை ராணுவம் பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்குவது; சிறுபான்மை மாணவர்களுக்கு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை வழங்கி வந்த மெட்ரிக் கல்வி உதவித் தொகையை நிறுத்தியது.

இதையும் படிங்க..DMK: நல்ல பீஸா அனுப்பு.. பெண் புரோக்கரிடம் ஆபாசமாக பேசிய திமுக நிர்வாகி - வைரல் ஆடியோ கிளப்பிய சர்ச்சை

What are the issues DMK MPs should raise in the budget session? - Instruction of Chief Minister Stalin

மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிப்பது; மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது; சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவது, கால்நடைகளை கோமாரி நோயிலிருந்து தடுக்கும் தடுப்பூசிகளைப் பெறுவது; தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்கள் மற்றும் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிப்பது.

மேலும், என்.எல்.சி. நிறுவனத்தின் வேலைவாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது; இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் - அகில இந்திய அளவில் எதிரொலிக்கும் பிரச்சினைகள் குறித்தும் இரு அவைகளிலும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்ப வேண்டுமென அறிவுறுத்துப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..Adani: 1.45 லட்சம் கோடி போச்சு.! பணக்காரர் பட்டியலில் பின்னடைவு - அடுத்த விஜய் மல்லையாவாக மாறுகிறாரா அதானி?

Follow Us:
Download App:
  • android
  • ios