Adani: 1.45 லட்சம் கோடி போச்சு.! பணக்காரர் பட்டியலில் பின்னடைவு - அடுத்த விஜய் மல்லையாவாக மாறுகிறாரா அதானி?
உலக பணக்காரர்கள் பட்டியில், தற்போது பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார் இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிடன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளாக அதானி குழுமம் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் சுமார் 1.45 லட்சம் கோடி அதானி நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்திய ஆண்டுகளாகவே மிக வேகமாக வளர்ந்து வரும் அதானி குழுமம், இந்தியாவின் முன்னணி வர்த்தக குழுமமாக மாறியுள்ளது எனலாம். சாதாராண தொழிலதிபராக இருந்து இன்று உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ள அதானி, உலக பில்லியனர்களில் 4வது இடத்தில் உள்ளார்.
இதையும் படிங்க..கேரளாவில் ஓகே.! தமிழ்நாட்டில் கைதா? பாஜகவுக்கு ஆதரவு கொடுக்கும் திமுக - ஓங்கி அடிக்கும் சீமான்
ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை அதானி நிறுவனத்தை ஆட்டம் காண வைத்துள்ளது.அதானி குழுமத்திற்கு இருக்கும் கடன் குறித்து அமெரிக்காவின் ஹிண்டர்பர்க் அறிக்கை வெளியிட்டு இருந்தது. இதுகுறித்து வெளியிட்டு இருந்த அறிக்கையில், இந்த குழுமத்திற்கு கணிசமான கடன் இருக்கிறது. இதுதான் இந்தக் குழும நிறுவனங்களை நிச்சயமற்ற நிலையில் வைத்து இருக்கிறது.
இந்தக் குழுமத்தின் கீழ் வரும் நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பை அதிக மதிப்பீடாக காட்டியதும் இதற்குக் காரணம் என்று தெரிவித்துள்ளது. ஹிண்டர்பர்க் அறிக்கையின்படி, அதானி குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான கவுதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு சுமார் 120 பில்லியன் டாலர். இத்துடன், கடந்த மூன்று ஆண்டுகளில் 100 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.
இவரது குழுமத்தின் கீழ் வரும் ஏழு மிக முக்கிய வர்த்தக நிறுவனங்களின் மதிப்பு, அந்த கால கட்டத்தில் சராசரியாக 819 சதவீதம் அதிகரித்துள்ளது. அதானி குழுமம் வரிச் சுமை இல்லாத நாடுகளில் நிறுவனங்களை அமைத்துள்ளது. இந்தக் குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் 2.5 பில்லியன் டாலர் அளவிற்கான பங்குகளை வெளியிடுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..முதல்வருக்கு திடீரென போன் போட்ட ஆளுநர் ஆர்.என் ரவி!.. ஆடிப்போன திமுக நிர்வாகிகள்! என்ன நடந்தது.?
இந்த ஆய்வறிக்கை பற்றி உடனடியாகக் கருத்து வெளியிட்ட அதானி நிறுவனம், தொடர் பங்கு வெளியீடு ஆரம்பிக்கும்போது வேண்டுமென்றே நிறுவனத்தின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உண்மைக்குப் புறம்பான விஷயங்களைத் திரித்து ஷார்ட் செல்லிங் மூலம் லாபம் கிடைப்பதற்காக ஹிண்டன்பர்க் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அதானியின் சொத்து மதிப்பு இன்று சுமார் 100 பில்லியன் டாலர்களாக குறைந்தது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி தற்போது 7வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு அதானி தொடர்ந்து 2வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய புதிய பட்டியலின்படி, பெர்னார்டு அர்ணால்ட் முதலிடத்திலும், எலான் மஸ்க் இரண்டாவது இடத்திலும், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இந்தியாவை சேர்ந்த ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானி இந்தப் பட்டியலில் 11வது இடத்தில் உள்ளார்.
இதையும் படிங்க..Bank Holiday: வங்கிக்கு 5 நாட்கள் விடுமுறை!.. வாடிக்கையாளர்களே உஷார்!! எப்போது தெரியுமா.?