முதல்வருக்கு திடீரென போன் போட்ட ஆளுநர் ஆர்.என் ரவி!.. ஆடிப்போன திமுக நிர்வாகிகள்! என்ன நடந்தது.?
குடியரசு தினத்தன்று மாலை 4.30 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் வைத்து தேநீர் விருந்து நடைபெற உள்ளது. இந்த தேநீர் விருந்துக்கு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காத காரணத்தால் ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 ஆம் தேதி தேநீர் விருந்தை புறக்கணித்தது.
இந்தநிலையில் தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கு எதிராக தொடர்ந்து கருத்து கூறுவதும், தமிழ்நாட்டிற்கு தமிழகம் என்ற பெயர் தான் சரியாக இருக்கும் என தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்ட ஆளுநர் ரவி தமிழ்நாடு, அமைதி பூங்கா, அண்ணா,பெரியார், அம்பேத்கர் போன்ற வார்த்தைகளை பேச தவிர்த்தார்.
இதையும் படிங்க..அதிமுக ஒன்றுபட வேண்டும்.. பிரதமர் மோடி விருப்பம்! ஆனால் இரட்டை இலை மட்டும்.? ஓபிஎஸ் காட்டிய அதிரடி
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் மு.க ஸ்டாலின், ஆளுநரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி பதிலடி கொடுத்தார். இதனையடுத்து ஆன்லைன் மசோதா மீது தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு ஒப்படைத்த நிலையில் அதற்க்கு எந்தவித அனுமதியும் கொடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் குடியரசு தினத்தன்று மாலை 4.30 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் வைத்து தேநீர் விருந்து நடைபெற உள்ளது. இந்த தேநீர் விருந்துக்கு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆளுநரின் தேநீர் விருந்தை காங்கிரஸ் கட்சியும் புறக்கணிப்பதாக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க..ஜனவரி 27 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
அதேபோல ஆளுநரின் தேநீர் விருந்தே புறக்கணிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஏற்கனவே அறிவித்துள்ளார். மேலும், தமிழக மக்களை அவமதிக்கும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது. திமுகவின் கூட்டணி கட்சிகள் வரிசையாக புறக்கணித்துள்ளது. திமுகவும் புறக்கணிக்குமா ? என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக குடியரசு தின தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இது முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது. ஆளுநர் அழைப்பு விடுத்துள்ள நிலையில் நாளை நடைபெற உள்ள ஆளுநரின் தேநீர் விருந்தில் திமுகவினர் பங்கேற்பார்களா ? என்று கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க..Bank Holiday: வங்கிக்கு 5 நாட்கள் விடுமுறை!.. வாடிக்கையாளர்களே உஷார்!! எப்போது தெரியுமா.?