MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தேர்தல் நடத்தை விதிகள் அமல்.. என்ன செய்யணும்? என்ன செய்யக்கூடாது? முழு விபரம் இதோ!

தேர்தல் நடத்தை விதிகள் அமல்.. என்ன செய்யணும்? என்ன செய்யக்கூடாது? முழு விபரம் இதோ!

Tamil Nadu Assembly Election 2026: தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசியல் கட்சிகள் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Mar 15 2026, 05:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026
Image Credit : Google

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026

கேரளா, அசாம், தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களுக்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அசாம், கேரளா மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நமது தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிமிடம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

24
தேர்தல் நடத்தை விதிகள் அமல்
Image Credit : Google

தேர்தல் நடத்தை விதிகள் அமல்

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் என்னென்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக்கூடாது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

* தமிழக அரசு தரப்பில் இனிமேல் எந்த‌ புதிய நலத்திட்டங்களையோ, சலுகைகளையோ அறிவிக்கக் கூடாது.

* புதிய சாலைப் பணிகள், கட்டிடத் திறப்பு விழாக்கள் அல்லது அடிக்கல் நாட்டு விழாக்கள் ஏதும் நடத்தக் கூடாது.

Related Articles

Related image1
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு.. வாக்கு எண்ணிக்கை எப்போது? முழு விவரம்!
Related image2
வாக்குச்சாவடியில் போன் வைக்க தனி வசதி.. மூத்த குடிமக்களுக்கும் குட் நியூஸ் சொன்ன தேர்தல் ஆணையம்!
34
அரசு பணத்தில் விளம்பரம் கூடாது
Image Credit : Asianet News

அரசு பணத்தில் விளம்பரம் கூடாது

* அரசுப் பணத்தில் அரசியல் கட்சிகளின் சாதனைகளை விளம்பரப்படுத்தக் கூடாது. அரசு வாகனங்கள், அரசு விருந்தினர் மாளிகைகள் போன்றவற்றைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது. பொது இடங்களில் இருக்கும் அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள், சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் மறைக்கப்பட வேண்டும்.

* உரிய ஆவணங்கள் இன்றி 50,000 ரூபாய்க்கும் அதிகமான பணத்தை எடுத்துச் செல்லக் கூடாது.

* உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50,000-க்கும் அதிகமான பணத்தை எடுத்துச் செல்லக் கூடாது.

44
மதம், ஜாதி அல்லது மொழி அடிப்படையில் வாக்கு சேகரிக்கக் கூடாது
Image Credit : X

மதம், ஜாதி அல்லது மொழி அடிப்படையில் வாக்கு சேகரிக்கக் கூடாது

* அதிக அளவிலான தங்கம் அல்லது பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டாலும், உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கம், பணம் கொண்டு செல்லப்பட்டாலும் பறிமுதல் செய்யப்படும்.

* அரசியல் கட்சி தலைவர்கள் மதம், ஜாதி அல்லது மொழி அடிப்படையில் வாக்கு சேகரிக்கக் கூடாது.

* பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த காவல்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

* அரசியல் கட்சிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாது.

* அரசியல் கட்சிகள் பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க மாநில எல்லைகள் மற்றும் முக்கியச் சாலைகளில் பறக்கும் படைகள் (Flying Squads) அமைக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
தேர்தல்
Latest Videos
Recommended Stories
Recommended image1
வாக்குச்சாவடியில் போன் வைக்க தனி வசதி.. மூத்த குடிமக்களுக்கும் குட் நியூஸ் சொன்ன தேர்தல் ஆணையம்!
Recommended image2
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு.. வாக்கு எண்ணிக்கை எப்போது? முழு விவரம்!
Recommended image3
தேர்தல் நடத்தை விதிகள் அமல்.. என்ன செய்யணும்? என்ன செய்யக்கூடாது? முழு விபரம் இதோ!
Related Stories
Recommended image1
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு.. வாக்கு எண்ணிக்கை எப்போது? முழு விவரம்!
Recommended image2
வாக்குச்சாவடியில் போன் வைக்க தனி வசதி.. மூத்த குடிமக்களுக்கும் குட் நியூஸ் சொன்ன தேர்தல் ஆணையம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved