MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 6 மணி நேரம் விஜய்யை திணறடித்த சிபிஐ.. தளபதியை தண்ணி குடிக்க வைத்த 'அந்த' கேள்வி.. நடந்தது என்ன?

6 மணி நேரம் விஜய்யை திணறடித்த சிபிஐ.. தளபதியை தண்ணி குடிக்க வைத்த 'அந்த' கேள்வி.. நடந்தது என்ன?

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ இன்று 3ம் கட்டமாக விசாரணை நடத்தியுள்ளது. கேள்விகள் அனைத்துக்கும் விஜய் பொறுமையாக விளக்கமாக பதில் அளித்துள்ளார்.

2 Min read
Author : Rayar r
Published : Mar 15 2026, 07:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
விஜய்யிடம் சிபிஐ 3வது முறையாக விசாரணை
Image Credit : Asianet News

விஜய்யிடம் சிபிஐ 3வது முறையாக விசாரணை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ நடத்திய 3ம் கட்ட விசாரணை நிறைவு பெற்றுள்ளது. ஏற்கெனவே இரண்டு முறை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான விஜய், இன்று காலை 11 மணி அளவில் மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார். காலை 111 மணி முதல் மாலை 5.30 மணி வரை என 6 மணி நேரம் 30 நிமிடங்கள் விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

24
விஜய்யிடம் சிபிஐயிடம் கேட்ட கேள்வி
Image Credit : X

விஜய்யிடம் சிபிஐயிடம் கேட்ட கேள்வி

இடையில் அரை மணி நேரம் மதிய உணவு சாப்பிட அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பின்பு தொடர்ந்து நடந்த விசாரணை நிறைவு பெற்றுள்ளது. இன்றைய விசாரணையில் விஜய்யிடம் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கரூர் பொதுக்கூட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட நேரத்தை விட விஜய் சுமார் 7 மணி நேரம் தாமதமாக வந்தது ஏன்? நீங்கள் வருவதற்கு தாமதமானதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதா? நீண்ட நேரம் மக்கள் காத்திருந்ததே நெரிசலுக்கு முக்கிய காரணமா? என்று விஜய்யிடம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Articles

Related image1
விஜய் டாப்.. முதல்வர் பதவியில் ஸ்டாலின்.. அடுத்து ஆட்சி அமைப்பது யார்? சர்வே கொடுத்த ஷாக்
Related image2
Now Playing
தவெக-வை நாங்கள் பயமுறுத்தவில்லை என்றும், விஜய் அமைதியாக இருக்கும்போது நாம் பேசத் தேவையில்லை
34
கரூர் சம்பவத்துக்கும், செந்தில் பாலாஜிக்கும் என்ன தொடர்பு
Image Credit : Asianet News

கரூர் சம்பவத்துக்கும், செந்தில் பாலாஜிக்கும் என்ன தொடர்பு

நெரிசல் ஏற்பட்டபோது மேடையில் இருந்து உடனடியாக அறிவிப்புகளை வெளியிட்டு நிலைமையைக் கட்டுப்படுத்த ஏன் முயற்சி எடுக்கப்படவில்லை? என்றும் கேட்கப்பட்டுள்ளது. அப்போது இந்த கேள்விகள் அனைத்துக்கும் விஜய் பொறுமையாக விளக்கமாக பதில் அளித்துள்ளார். மேலும் மிக முக்கியமாக கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கும், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் என்ன தொடர்பு? என விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் கேள்வி கேட்டுள்ளனர்.

44
விஜய் சொன்னது என்ன?
Image Credit : Asianet News

விஜய் சொன்னது என்ன?

அதாவது கரூர் சம்பவத்துக்கு செந்தில் பாலாஜி சில குளறுபடிகளை ஏற்படுத்தியதால் தான் உயிரிழப்புக்கு காரணம் என தவெகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக நேரில் ஆஜராக செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இந்த நிலையில், கரூர் சம்பவத்துக்கும், செந்தில் பாலாஜிக்கும் என்ன தொடர்பு? எதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு முன்வைக்கிறீர்கள்? என விஜய்யிடம் சிபிஐ கேட்டதாக கூறப்படுகிறது. இந்த கேள்விக்கும் விஜய் உரிய பதில் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டிவி.கே. விஜய்
சிபிஐ (மத்திய புலனாய்வுப் பிரிவு)
tvk நெரிசல்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தேர்தல் நடத்தை விதிகள் அமல்.. என்ன செய்யணும்? என்ன செய்யக்கூடாது? முழு விபரம் இதோ!
Recommended image2
வாக்குச்சாவடியில் போன் வைக்க தனி வசதி.. மூத்த குடிமக்களுக்கும் குட் நியூஸ் சொன்ன தேர்தல் ஆணையம்!
Recommended image3
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு.. வாக்கு எண்ணிக்கை எப்போது? முழு விவரம்!
Related Stories
Recommended image1
விஜய் டாப்.. முதல்வர் பதவியில் ஸ்டாலின்.. அடுத்து ஆட்சி அமைப்பது யார்? சர்வே கொடுத்த ஷாக்
Recommended image2
Now Playing
தவெக-வை நாங்கள் பயமுறுத்தவில்லை என்றும், விஜய் அமைதியாக இருக்கும்போது நாம் பேசத் தேவையில்லை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved