ஜனவரி 27 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
ஜனவரி 27ம் தேதி விடுமுறை என்று தமிழக அரசு உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
வரும் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை என்று தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் திருவிழாக்களில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு குறைந்து நிலைமை சரியான நிலையில் பல மாவட்டங்களில் பல்வேறு திருவிழாக்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. தற்போது இயல்புக்கு நிலை திரும்பி வருகிறது.
இதையும் படிங்க..ஓய்வூதியம் 7500 ரூபாயில் இருந்து 25000 ரூபாயாக உயரப்போகிறது.. ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு EPFO முக்கிய செய்தி
தமிழகத்தில் மிகவும் பிரசித்திப்பெற்ற கோவில்களில் ஒன்று பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில். தை மாதம் முழுவதும் இங்கு மக்கள் கூட்டம் அலைமோதும். மேலும் இந்த ஆண்டு குடமுழுக்கு நடைபெற உள்ளது. ஒவ்வொரு இந்து கோவிலிலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறுவது வாடிக்கை ஆகும்.
பழனியில் வரும் ஜனவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு நாடாகும் இந்த விழாவை காண இலட்சக்கணக்கான பக்தர்கள் காத்துள்ளனர். அதுமட்டுமின்றி விழாவுக்கான ஏற்பாடுகள் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. அதற்காக போலீசார் தீவிர பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளார்கள்.
இந்த நிலையில் வரும் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு திண்டுக்கலில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி 25ம் தேதி வேலைநாளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..லூடோ கேமில் வளர்ந்த காதல்.. பாகிஸ்தான் பொண்ணு - இந்தியா பையன் - கடைசியில் அதிர்ந்து போன போலீசார்.?