ஓய்வூதியம் 7500 ரூபாயில் இருந்து 25000 ரூபாயாக உயரப்போகிறது.. ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு EPFO முக்கிய செய்தி
ஓய்வூதியம் 7500 ரூபாயில் இருந்து 25000 ரூபாயாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான விவரங்களை இதில் பார்க்கலாம்.
பணியாளர்கள் ஓய்வூதியத் திருத்தத் திட்டம், 2014, அறிவிப்பை வெளியிட்டு மத்திய அரசால் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கான அதிகபட்ச சம்பளம் ரூ 15,000 (அடிப்படை ஊதியம்) நிர்ணயித்துள்ளது. அதாவது, உங்கள் சம்பளம் மாதம் 15,000 ரூபாய்க்கு மேல் இருந்தாலும், உங்கள் ஓய்வூதியம் அதிகபட்ச சம்பளமான 15,000 ரூபாயில் மட்டுமே கணக்கிடப்படும்.
இபிஎஃப்ஓவின் இந்த சம்பள வரம்பை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. ஊழியர் ஓய்வூதியம் (ஊழியர் ஓய்வூதியத் திட்டம்) கடைசி ஊதியத்தில் அதாவது அதிக ஊதியத்தில் கணக்கிடப்படலாம். இந்த முடிவால், ஊழியர்களுக்கு பல மடங்கு ஓய்வூதியம் கிடைக்கும்.
இதையும் படிங்க..லூடோ கேமில் வளர்ந்த காதல்.. பாகிஸ்தான் பொண்ணு - இந்தியா பையன் - கடைசியில் அதிர்ந்து போன போலீசார்.?
ஓய்வூதியம் பெற, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் (EPF) 10 ஆண்டுகள் பங்களிக்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில், 20 ஆண்டுகள் பணியை முடித்தவுடன், 2 ஆண்டுகள் வெயிட்டேஜ் வழங்கப்படுகிறது. உச்ச நீதிமன்றம் வரம்பை நீக்க முடிவு செய்தால், அது எவ்வளவு வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்பதை இதில் பார்க்கலாம்.
தற்போதைய முறையின்படி, ஒரு ஊழியர் ஜூன் 1, 2015 முதல் பணிபுரிந்து, 14 ஆண்டுகள் பணி முடித்த பிறகு ஓய்வூதியம் பெற விரும்பினால், அவர் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தாலும் அவரது ஓய்வூதியம் ரூ.15,000 ஆகக் கணக்கிடப்படும். பழைய கணக்கின்படி, 14 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன், ஜூன் 2, 2030 முதல் ஊழியர் சுமார் 3000 ரூபாய் ஓய்வூதியத்தைப் பெறுவார். ஓய்வூதியத்தைக் கணக்கிடுவதற்கான சூத்திரம்- (சேவை வரலாறுx15,000/70).
ஆனால், உச்ச நீதிமன்றம் ஊழியர்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்தால், அதே ஊழியரின் ஓய்வூதியம் அதிகரிக்கும். ஒரு ஊழியரின் சம்பளம் (அடிப்படை சம்பளம் + DA) 20 ஆயிரம் ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். பென்ஷன் ஃபார்முலாவைக் கணக்கிடுவதன் மூலம் அவரது ஓய்வூதியம் ரூ.4000 (20,000X14)/70 = ரூ.4000 ஆக இருக்கும். அதேபோல, அதிக சம்பளம், ஓய்வூதிய பலன் அதிகமாக இருக்கும். அத்தகைய நபர்களின் ஓய்வூதியத்தில் 300% அதிகரிப்பு இருக்கலாம்.
இதையும் படிங்க..Viral video: பெங்களூரில் கொட்டிய பண மழை.. நடுரோட்டில் கிடந்த பணத்தை அள்ளிய பொதுமக்கள் - யாருப்பா அந்த ஆளு.?
EPFO இன் விதிகளின்படி, ஒரு ஊழியர் தொடர்ந்து 20 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் EPF க்கு பங்களித்தால், அவருடைய சேவையில் மேலும் இரண்டு ஆண்டுகள் சேர்க்கப்படும். இதனால் 33 ஆண்டுகள் பணி நிறைவு பெற்றாலும், ஓய்வூதியம் 35 ஆண்டுகளாக கணக்கிடப்பட்டது. அத்தகைய சூழ்நிலையில், அந்த ஊழியரின் சம்பளம் 333 சதவீதம் அதிகரிக்கலாம்.
ஊழியர்களின் ஓய்வூதியத் திருத்தத் திட்டம், 2014 மத்திய அரசால் செப்டம்பர் 1, 2014 முதல் ஒரு அறிவிப்பை வெளியிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கு தனியார் துறை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2018-ம் ஆண்டு கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தொழிலாளர் அமைச்சகம் மற்றும் இபிஎப்ஓ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த உத்தரவின் மூலம் ஓய்வூதியம் 50 மடங்கு வரை அதிகரிக்கலாம் என்று EPFO கருதுகிறது. ஆகஸ்ட் 25 அன்று, நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதி அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை விசாரித்த போது, இந்த வழக்கை பெரிய மூன்று பேர் கொண்ட அமர்வுக்கு மாற்ற முடிவு செய்தது. வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..லக்னோவில் சென்று கொண்டு இருக்கும் கார் மீது ரொமான்ஸ் செய்யும் காதல் ஜோடி; வைரல் வீடியோ!!